அமெரிக்காவிடம் உதவி கேட்கும் ஹாங்காங் மக்கள்!

ஹாங்காங்: சீனாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இங்கிலாந்தின் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்து இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்தன. ஆனாலும், ஹாங்காங் குடிமக்களுக்கு தனி சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. சீனா வின் சட்டதிட்டங்கள் ஹாங்காங்கில் இல்லாமல், தனியாக சட்டங்கள் இருந்தது. சமீபத்தில் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்தை அறிவித்தார்கள். அதை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. அந்த சட்டத்தை
 

அமெரிக்காவிடம் உதவி கேட்கும் ஹாங்காங் மக்கள்!

ஹாங்காங்: சீனாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இங்கிலாந்தின் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக  அறிவித்து இரு நாடுகளும்  ஒப்பந்தம் செய்தன.

ஆனாலும், ஹாங்காங் குடிமக்களுக்கு தனி சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.  சீனா வின் சட்டதிட்டங்கள் ஹாங்காங்கில் இல்லாமல், தனியாக சட்டங்கள் இருந்தது. சமீபத்தில் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்தை அறிவித்தார்கள். அதை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.

அந்த சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட போதிலும் மக்களின் போராட்டம் குறையவில்லை. நீண்டநாள் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் தொடர்கிறது. சீனாவிடமிருந்து விடுதலை பெற்று சுயாட்சியுடன் இயங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. 

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு, அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரத்திற்கு முன்பு குழுமிய போராட்டக்காரர்கள் அமெரிக்க கொடியை ஏந்தி, அதிபர் ட்ரம்ப் படங்களையும் தாங்கி அமெரிக்காவுக்கு ஆதரவான முழக்கங்களையும், தங்கள் கோரிக்கைகளையும் எழுப்பினார்கள். அமெரிக்க தேசிய கீதம் பாடியும் தங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுமாறு கேட்டுள்ளார்கள்.

அமெரிக்காவிடம் உதவி கேட்கும் ஹாங்காங் மக்கள்!

இது சீனாவின் உள்நாட்டு விவகாரம், அன்னிய நாடுகள் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்று சீனாவின் அரசுத் தரப்பு கூறியுள்ளது. போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் உதவியை கேட்டுள்ளது புதிய திருப்பமாக உள்ளது.

 

From around the web