ஹீரோவாகப் பாய்ந்து சென்று குழந்தையைக் காப்பாற்றிய  ‘ஹாலிவுட் வில்லன்’  டேனி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: டேனி ட்ரையோ பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் ஆவார். மச்சேத்தே என்ற வேடத்தில் ஹீரோவாகவும் புகழ் பெற்றவர். ஸ்பை கிட்ஸ், அனகோண்டா, ப்ரிடேட்டர், ரேஞ்ச் 15 போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். டெஸ்பரேட் ஹவுஸ் ஒய்ஃப்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அனிமேஷன் படங்களில் பின்னணி குரல் கொடுக்கவும் செய்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் டேனி, ஹைவே சாலையில் செல்லும் போது கண் எதிரே ஒரு கார் விபத்துக்குள்ளாகியதைப் பார்த்துள்ளார். விபத்துக்குள்ளான கார்
 

ஹீரோவாகப் பாய்ந்து சென்று குழந்தையைக் காப்பாற்றிய  ‘ஹாலிவுட் வில்லன்’  டேனி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: டேனி ட்ரையோ பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் ஆவார். மச்சேத்தே என்ற வேடத்தில் ஹீரோவாகவும் புகழ் பெற்றவர். ஸ்பை கிட்ஸ், அனகோண்டா, ப்ரிடேட்டர், ரேஞ்ச் 15 போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். டெஸ்பரேட் ஹவுஸ் ஒய்ஃப்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அனிமேஷன் படங்களில் பின்னணி குரல் கொடுக்கவும் செய்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் டேனி, ஹைவே சாலையில் செல்லும் போது கண் எதிரே ஒரு கார் விபத்துக்குள்ளாகியதைப் பார்த்துள்ளார். விபத்துக்குள்ளான கார் தலைகிழாக கவிழ்ந்தும் விட்டது. உடனடியாக ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு, விபத்துக்குள்ளான காரை நோக்கிப் பாய்ந்துள்ளார்.

அங்கே ஒரு 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் பெருங்குரலெடுத்து அழுவது கேட்டுள்ளது. காருக்குள் அந்த சிறுவன் குழந்தைகள் சீட்டில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். விறுவிறுவென்று காருக்குள் இறங்கி,  சீட்டை கழட்டி சிறுவனை மீட்டு வெளியே எடுக்க முயன்றுள்ளார். அங்கே வந்த ஒரு இளம்பெண்ணும் அவருக்கு உதவ, இருவருமாக சிறுவனை காருக்கு வெளியே கொண்டு வந்தனர். 

ஹீரோவாகப் பாய்ந்து சென்று குழந்தையைக் காப்பாற்றிய  ‘ஹாலிவுட் வில்லன்’  டேனி!மிரண்டு போய் இருந்த சிறுவனை சூப்பர் பவர் டயலாக் சொல்லி ஆசுவாசப்படுத்தியுள்ளார். போலீஸ், எமெர்ஜென்சி வாகனங்களும் விரைந்து வந்தது. காரிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனையும் உடன் பயணித்த இருவரையும் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். பலத்த காயம் எதுவும் இல்லாமல் அனைவரும் தப்பியுள்ளனர்.

வில்லன் நடிகர் டேனி ட்ரையோ ஹீரோ  போல் ஓடிச்சென்று  விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டெடுத்த சம்பவம் ஹாலிவுட்டிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

 

From around the web