அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் 23ம் தேதி முடிவடைந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறை தினங்களை ஜனவரி 2ம் தேதி வரையில் நீட்டித்து பள்ளி கல்வித் துறை அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை
 

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு!மிழகம் முழுவதும்  உள்ள அனைத்து பள்ளிகளிலும்  அரையாண்டு தேர்வுகள் 23ம் தேதி முடிவடைந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறை தினங்களை  ஜனவரி 2ம் தேதி வரையில் நீட்டித்து பள்ளி கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜனவரி 2-ஆம் தேதியும் பள்ளிகள் விடுமுறை  என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜனவரி 3ஆம் தேதி முதல் வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் கூடுதலாக கிடைத்து இருக்கிறது.

அரையாண்டு தேர்வு, உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என மொத்தமாக பத்து நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.

https://www.A1TamilNews.com

 

From around the web