அமெரிக்காவில் வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

ஹாபர்ட்: அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள ஹாபர்ட் நகரின் வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. கார்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், ஆங்காங்கே சென்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வால்மார்ட்டின் உள்ளே ஓடியுள்ளனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. விரைந்து வந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபரை வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. காயம் அடைந்தவர்கள்
 

அமெரிக்காவில் வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

ஹாபர்ட்: அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள ஹாபர்ட் நகரின் வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. கார்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், ஆங்காங்கே சென்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வால்மார்ட்டின் உள்ளே ஓடியுள்ளனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.

விரைந்து வந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபரை வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

நேற்று வெஸ்ட் டெக்சாஸில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இண்டியானா போலீஸிலிருந்து சிகாகோ செல்லும் வழியில் உள்ள இந்த சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள்: நன்றி – nwitimes

From around the web