இந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்? ஏன் தடுத்தார்கள்?

ஹிந்தியை படித்திருந்தால் இன்னமும் நன்றாக முன்னேறி இருப்போம் என தமிழ் அருவி மணியன் , சாலமன் பாப்பையா போன்ற ஆளுமைகளே பேசத் தொடங்கி இருகிறார்கள். பொது மக்களும் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் என பிற மொழிகளை கட்டாய மொழியாக படித்தால் என்ன தவறு? அவர்கள் சொல்வது சரிதானே என பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற கருத்துப்படி ‘ ஹிந்தி படித்து இருந்தால்? ‘. எப்போது படித்து இருந்தால் என்ற கேள்விக்கு வருவோம். அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஹிந்தி திணிப்புக்கு
 

இந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்? ஏன் தடுத்தார்கள்?ஹிந்தியை படித்திருந்தால் இன்னமும் நன்றாக முன்னேறி இருப்போம் என தமிழ் அருவி மணியன் , சாலமன் பாப்பையா போன்ற ஆளுமைகளே பேசத் தொடங்கி இருகிறார்கள். பொது மக்களும் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் என பிற மொழிகளை கட்டாய மொழியாக படித்தால் என்ன தவறு?

அவர்கள் சொல்வது சரிதானே என பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற கருத்துப்படி ‘ ஹிந்தி படித்து இருந்தால்? ‘. எப்போது படித்து இருந்தால் என்ற கேள்விக்கு வருவோம்.

அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்திய ஆண்டு 1965. திமுக ஆட்சிக்கு வந்து இரு மொழிக் கொள்கையை அமல் படுத்தியது 1967 ம் ஆண்டு.

சாலமன் பாப்பையா பிறந்த ஆண்டு 1936 . கல்லூரி விரிவுரையாளர் ஆன ஆண்டு 1961.
எங்கே , யார் அவரை ஹிந்தி படிக்க விடாமல் தடுத்தார்கள்? வேலைக்குச் சேர்ந்த பிறகா?

இதே ஆண்டு கணக்கு தமிழருவி மணியனுக்கும் பொருந்தும். ஒரு வேளை ஹிந்தி படித்து இருந்தால் மத்திய அரசு அலுவகத்தில் குமாஸ்தா வேலைக்கு போய், பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாமல் பணி ஓய்வு பெற்று இருப்பார்கள்.

தமிழ் மட்டுமே பேசி பட்டிமன்றம் , மேடைப் பேச்சு மூலம் உலகம் முழுவதும் சுற்றி வந்த அவர்களுக்கு எது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது எனத் தெரியவில்லை.

தமிழ் அருவி மணியனுக்கு அந்த பெயரை சூட்டியவர் காமராஜர். அருவி போல் தமிழ் பேசுவதால் அந்த பெயரை அவருக்கு வைத்தார் பெருந்தலைவர். அருவிக்கு மற்றொரு பெயர் நீர்வீழ்ச்சி. தமிழ்நீர்வீழ்ச்சி மணியன் என சொல்லிப் பாருங்கள்? நீரில் கூட வீழ்ச்சியை விரும்பாத மொழி தமிழ்.

ஒரு வாதத்திற்கு இவர்கள் மாணவர்களுக்காக பேசுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஏன் பேசுகிறார்கள்? வட இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது என பதில் வரும் . ஒரு காலத்தில் இருந்தது.

மக்கள் கூட்டம் கூட்டமாக 1980 களில் மும்பைக்கு படை எடுத்தார்கள். போனவர்கள் பஞ்சாலை ,தொழிற்சாலை , வீட்டு வேலை போன்ற உடல் உழைப்பை தேவைப்படும் இடங்களில் வேலைக்கு சேர்ந்தார்கள். அந்த வேலையை தான் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் கடிகாரம் 1980 லேயே நிற்கிறது.

இன்றைக்கு தென் மாநிலங்களில் கணிப்பொறி நிறுவனங்கள் அதிகம் இருப்பதற்கு இங்குள்ள மக்களின் ஆங்கிலப் புலமையும் ஒரு காரணம் . ஹிந்தி புலமை அல்ல. உலக மயமாக்கலுக்கு பின் மொழி வேலைக்கு ஒரு பொருட்டே இல்லை.

சரி, ஹிந்தி படித்து IAS, IPS போன்ற உயர் பதவிக்கு வட இந்தியாவில் வந்து, திருக்குறள்
போன்ற நல்ல நூல்களை ஹிந்தி பேசும் மக்களிடம் பரப்பலாமே என்ற வாதத்திற்கு
வருவோம். இப்படித்தான் தருண் விஜய் என்ற எம்.பி. திருவள்ளுவரை முன்நிறுத்தி வட இந்தியாவில் தமிழின் பெருமை பரப்ப போவதாக ஒரு நாடகம் போட்டார்.

அந்த நாடகத்தில் அவரை அறியாமல் ஒரு வசனம் பேசிவிட்டார், “தமிழர்கள் கறுப்பர்கள் ஆனாலும் நாங்கள் எங்களுக்கு சமமாக நடத்துகிறோம் “. எவ்வளவு இனவெறி , நிறவெறி இருந்தால் இந்த வார்த்தை வரும்.

இப்படி சமுக நீதி பற்றி அக்கறை இல்லா கட்சிகளின் கதைக்கு உதவாத ஹிந்தி, சமஸ்கிருத மொழியை திணிக்கின்ற கொள்கைக்கு தான் இவர்கள் துணை போகிறார்களா?

சிறுபான்மையினர் , தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் போன்ற மக்களுக்கென
திராவிட கட்சிகள் நடத்திய சமுக நீதி போராட்டங்கள் தான் இன்றைக்கும் இந்தியாவிற்கு முன்மாதிரி. பெண்களும் சொத்தில் பங்கு என்பதை 30 வருடங்களுக்கு முன்பே செய்து தமிழ்நாடு. கல்வியிலும் அப்படித்தான். காமராஜர் விதைத்த மதிய உணவு என்ற விதை
இன்று மாணவர்களுக்க இலவச மடிக்கணினி என்ற அளவிற்கு வளர்ந்து,  தமிழகத்தின் கல்வி அறிவின் சதவீதம் 80.33 % என்ற அளவில் முன்னேறி உள்ளது.
.
ஹிந்தியை முதல் மொழியை படிக்கின்ற பல மாநிலங்களை விட கல்வி அறிவின் சதவீதம் தமிழ் நாட்டில் அதிகம்.. ஏன் இது தேசிய சராசரியை விட அதிகம். மலையை உடைத்து சமவெளியாக்கி அதைத்தான் சமத்துவம், முன்னேற்றம் என்பார்களோ?

சரி அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஹிந்தி உதவுமே என்று ஒரு வாதம் இருக்கிறது. வட இந்திய அரசியலில் மிகவும் மதிக்கப்பட்ட காமராஜர், அண்ணா, இரா.செழியன், அப்துல் கலாம், ப.சிதம்பரம் போன்ற தலைவர்களுக்கு ஹிந்தியில் பெரிய புலமை கிடையாது.

ஒற்றை ஓட்டில் அன்றைய வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலிதாவை தமிழ் நாட்டில் நிறை பேர் ஆதரிக்கவில்லை. ஹிந்தி பேசுகிறார் , முற்பட்ட சமுகத்தை சேர்ந்தவர், பிஜேபி கட்சி என கண்ணை முடிக்கொண்டு தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் எதிர்க்கவில்லை.

அரசியலில் ஆளுமை தலைவர்கள் செயலால் வரும் மொழியால் அல்ல. எங்கோ இருக்கும் ஆங்கிலத்தை படிப்பீர்கள் பக்கத்தில் இருக்கும் ஹிந்தி படிக்க மாட்டீர்களா? அவன் எப்படி நம்முடன் தொடர்பு கொள்வான். அவன் இந்தியன் இல்லையா ? என்ற கேள்வி இருக்கிறதா உங்களிடம். ஜெய காந்தன் சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. “உனக்கு முதுகு அரிச்சா நீ சொறிஞ்க்கோ , உன் அறிப்புக்கெல்லாம் நான் சொறிய முடியாது “.

பெரிய நாய் உள்புகும் அளவில் கதவு இருக்க சின்ன நாய் போக தனிக் கதவு எதற்கு ? ! என்ற அறிஞர் அண்ணாவின் மேற்கோள் தான் நமக்கான பதில். ஆங்கிலம் என்ற ஒரு கதவு
எங்களுக்கு போதும் . உலகத்தோடும் , வட இந்தியர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பர்கள் அவர்கள் வீட்டு வாசலில் இரண்டு கதவு வைத்துக் கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் கட்டயம் இரண்டு கதவு வைக்க வேண்டும் என கேட்க வேண்டாம்.

ஏன் என்றால் கதவு என்பது வீடு அல்ல. மொழி என்பது அறிவு அல்ல!!

⁃ சேயோன்

A1TamilNews.com

From around the web