அமெரிக்க குடியுரிமை, க்ரீன் கார்டுகள் கட்டணம் உயர்வு!

அமெரிக்க குடியுரிமை மற்றும் க்ரீன் கார்டுகள் விண்ணப்பத்திற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹெச்1 பி விசாவில் 6 வருட காலத்திற்கே அமெரிக்காவில் பணியாற்ற முடியும் என்பதால், மேலும் அங்கே தங்கியிருக்க க்ரீன் கார்டு என்றழைக்கப்படும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு தோறும் இந்தியர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே க்ரீன் கார்டுகள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். வேலை வாய்ப்பு அடிப்படையில் வழங்கப்படும் க்ரீன்கார்டுகளுக்கு, ஒவ்வொரு நாட்டுக்கும் நிர்ணயிக்கப்ப்பட்டுள்ள ஆண்டு எண்ணிக்கையை நீக்கி விட்டு முதலில்
 

அமெரிக்க குடியுரிமை, க்ரீன் கார்டுகள் கட்டணம் உயர்வு!மெரிக்க குடியுரிமை மற்றும் க்ரீன் கார்டுகள் விண்ணப்பத்திற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஹெச்1 பி விசாவில் 6 வருட காலத்திற்கே அமெரிக்காவில் பணியாற்ற முடியும் என்பதால், மேலும் அங்கே தங்கியிருக்க க்ரீன் கார்டு என்றழைக்கப்படும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு தோறும் இந்தியர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே க்ரீன் கார்டுகள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

வேலை வாய்ப்பு அடிப்படையில் வழங்கப்படும் க்ரீன்கார்டுகளுக்கு, ஒவ்வொரு நாட்டுக்கும் நிர்ணயிக்கப்ப்பட்டுள்ள ஆண்டு எண்ணிக்கையை நீக்கி விட்டு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகப் பிரதிநிதிகள் போராடி வருகிறார்கள். செனட்டர்கள், அவை உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் இன்னமும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் க்ரீன் கார்டு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை 83 சதவீதம் அதிகரித்து உள்ளனர். உள்நாட்டு பாதுகாப்புத் துறை குடியுரிமை விண்ணப்ப மற்றும் சார்ந்த பிற சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ளது.

குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணம்  640 டாலரிலிருந்து ஆயிரத்து 170 டாலர்களாக உயர்த்தப்பட உள்ளது. க்ரீன் கார்டு விண்ணப்பத்திற்கான கட்டணம் 2 ஆயிரத்து 195 டாலர்களாக உயரும்.  இந்த கட்டண உயர்வு குறித்த வரைவு ஆணை டிசம்பர் 16ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துகளுக்காக முன் வைக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web