கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக கூறிய தணிகாசலம் கைது! அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகள்!

பரம்பரை சித்த வைத்தியர் என்று கூறப்படும் தணிகாசலம் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வந்தார். மருந்துகளையும் விற்பனை செய்தார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார் இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில், தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி முன்பு
 

கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக கூறிய தணிகாசலம் கைது! அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகள்!பரம்பரை சித்த வைத்தியர் என்று கூறப்படும் தணிகாசலம் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வந்தார். மருந்துகளையும் விற்பனை செய்தார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்

இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில், தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கு காரணம் என்ன? அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறும்போது, அதை அரசு பரிசோதனை செய்வதை விட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?‘ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு‘ என்று திருவள்ளுவரின் கூற்றுபடி அரசு செயல்படவில்லை. சித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினால், அவர்களது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழல் நம் நாட்டில் நிலவுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“மத்திய ஆயுஷ் அமைச்சகத்தையும், மத்திய, மாநில அரசுகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?. அவர்களது மருந்து பரிசோதனை செய்யப்பட்டதா? அதில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது? அவற்றில் எத்தனை மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?

தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?. * தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?.  மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.”  என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web