அதிமுக பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததால், சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஐடி ஊழியர் சுபஸ்ரீ மீது விழுந்தது. அவர் மீது லாரியும் மோதியதால் உயிரிழந்தார். பேனர் விழுந்து விபத்து நடந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷாயி அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. பேனர் தொடர்பாக ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று பிற்பகலுக்கு வழக்கை ஒத்து வைத்தார்கள்.
 
சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததால், சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஐடி ஊழியர் சுபஸ்ரீ மீது விழுந்தது. அவர் மீது லாரியும் மோதியதால் உயிரிழந்தார்.
 
பேனர் விழுந்து விபத்து நடந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷாயி அமர்வு  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. பேனர் தொடர்பாக ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று பிற்பகலுக்கு வழக்கை ஒத்து வைத்தார்கள்.
 
பிற்பகலில் காவல்துறை இணை ஆணையர், பள்ளிக்கரணை உதவி ஆணையர், மாநகராட்சி மண்டல் துணை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
 
“அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
 
பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகாரிகளிடம் வசூலித்துக் கொள்ளலாம். பேனர் வைத்தவர்களும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும்.
 
பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவு  முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை உருவாக்கியுள்ள பேனரால் இளம்பெண் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
 

From around the web