பொள்ளாச்சி வழக்கை இப்படியா சிபிஐக்கு மாற்றுவது? – உயர்நீதி மன்றம் கண்டனம்!

மதுரை: பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கை சிபி ஐக்கு மாற்றி உத்தரவிட்ட ஆவணத்தில் பாதிக்கப்பட்ட பெண் பற்றிய விவரங்களை வெளியிட்டதற்கு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் பெயரை நீக்கி புதிய ஆவணத்தை சிபிஐக்கு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளனர். பொள்ளாச்சி கொடூர சம்பவங்கள் தொடர்ப்பான வீடியோக்களை சமூகத்தளங்களில் பகிரப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கூறி திருச்சி இளமுகில் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.
 
 
மதுரை: பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கை சிபி ஐக்கு மாற்றி உத்தரவிட்ட ஆவணத்தில் பாதிக்கப்பட்ட பெண் பற்றிய விவரங்களை வெளியிட்டதற்கு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் பெயரை நீக்கி புதிய ஆவணத்தை சிபிஐக்கு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
 
பொள்ளாச்சி கொடூர சம்பவங்கள் தொடர்ப்பான வீடியோக்களை சமூகத்தளங்களில் பகிரப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கூறி திருச்சி இளமுகில் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் மாநில அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் பெயர் இல்லாமல் சிபிஐக்கு மாற்றும் புதிய ஆணை பிறப்பிக்குமாறு உத்தரவை பிறப்பித்தார்கள். 
 
“பாதிக்கப்பட்ட பெண்ணின் அழுகுரல் எங்கள் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர் யார் என்று தெரிந்தால் எப்படி மற்றவர்கள் இது போன்ற கொடுரங்களை தெரிவிக்க முன் வருவார்கள்?,”என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.  
 
இந்த சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். இந்த வழக்கில் இன்டர்நெட் சேவை நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். 
 
மேலும் பொள்ளாச்சி சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை பகிர்வது குற்றம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்கள்.  சைபர் குற்றங்களை கண்காணிக்க பள்ளி அளவிலும் கிளைகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
 
வழக்கை சென்னை அமர்வுக்கு மாற்றிய நீதிபதிகள், பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
 
– வணக்கம் இந்தியா
 

From around the web