கோவில்களை இழுத்து மூடிவிடலாமா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழ காலத்து செம்பு பட்டயங்கள், சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டுள்ளது. அவைகளை மீட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் ஜெகன்நாத். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, பதிலளிக்குமாறு மத்திய அரசின் கலாச்சாரத்துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அடுத்ததாக, திருச்சுழி திருமேனிநாதர் ஆலயத்தில் இருந்த ஆயிரம்
 
சென்னை:  தமிழ்நாட்டிலிருந்து ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழ  காலத்து செம்பு பட்டயங்கள், சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டுள்ளது. அவைகளை மீட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் ஜெகன்நாத். 
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, பதிலளிக்குமாறு மத்திய அரசின் கலாச்சாரத்துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
 
அடுத்ததாக, திருச்சுழி திருமேனிநாதர் ஆலயத்தில் இருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மயில் சிலை காணாமல் போன வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆலயத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சிலை அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். 
 
அவரிடம் “ சிலை அகற்றப் பட்டது ஏன், அனுமதி பெறாமல் அகற்றியதற்கு என்ன காரணம். கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வரும் கோயில்களில் சிலைகளை தமிழக இந்து அறநிலைத் துறையால் பாதுகாக்க முடிய முடியவில்லை என்றால் கோயில்களை மூடிவிடலாமா,” என்று கேள்வி நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். விசாரணை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
– வணக்கம் இந்தியா

From around the web