தினசரி மூலிகைத் தேநீர் , மஞ்சள், எலுமிச்சை, இஞ்சி அதிகம் சேர்த்துக் கொள்பவர்களே !உஷார்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், உடலில் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நமது பாரம்பரிய சமையல் முறைகளையும், சித்த மருத்துவ முறைகளையும் அனைத்து நாடுகளும் பின்பற்றத் துவங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சீரகம், இஞ்சி, மஞ்சள், சுக்கு, எலுமிச்சை போன்றவைகளை தினமும் உணவில்சேர்த்துக் கொள்ள் சித்த மருத்துவம் அறிவுறுத்துவதால் இந்த கொரோனா காலத்தில் பலரும் இவைகளைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக சமீப காலங்களில் மக்களிடையே எலுமிச்சை,
 

தினசரி மூலிகைத் தேநீர் , மஞ்சள், எலுமிச்சை, இஞ்சி அதிகம் சேர்த்துக் கொள்பவர்களே !உஷார்!லகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், உடலில் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நமது பாரம்பரிய சமையல் முறைகளையும், சித்த மருத்துவ முறைகளையும் அனைத்து நாடுகளும் பின்பற்றத் துவங்கியுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சீரகம், இஞ்சி, மஞ்சள், சுக்கு, எலுமிச்சை போன்றவைகளை தினமும் உணவில்சேர்த்துக் கொள்ள் சித்த மருத்துவம் அறிவுறுத்துவதால் இந்த கொரோனா காலத்தில் பலரும் இவைகளைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இதன் காரணமாக சமீப காலங்களில் மக்களிடையே எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவை அனைத்துமே நோய்க்கு எதிராகப் போராட உதவும் என்பது உண்மை தான்.

பக்க விளைவுகளற்ற, அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவல்ல ஆற்றலும் இவைகளுக்கு உண்டு. ஆனால் அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மூலிகை டீ, கசாயம் இவைகளை அளவுக்கு அதிகமாக குடித்தால் வயிற்றுப் பிரச்னைகள் வரும். தோல் பிரச்னைகளும் உண்டாகலாம். இவற்றை தினமும் ஏதாவது ஒன்று என்ற அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாலில் மஞ்சளும், பனங்கற்கண்டும் சேர்த்து தினசரிக் குடிப்பவர்கள் மஞ்சளின் அளவை குறைத்து சிட்டிகைக் கணக்கில்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறையும் ஒருநாளைக்கு ஒன்று அல்லது 2 தடவைகளுக்கு மேல் குடிக்கக் கூடாது. அதிகமாக குடிப்பதால் இரப்பை பிரச்னை, அமிலப் பிரச்னை உருவாகலாம்.

அதே போல் அளவுக்கு அதிகமாக இஞ்சியைப் பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், நெஞ்சு குடைச்சல் வயிற்றுப் பிரச்னைகள், வயிற்றுப்போக்கும் சில நேரங்களில் உண்டாகலாம். எனவே மூலிகை மருந்தாக இருந்தாலும் மாத்திரையைப் போல அளவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web