தொடரும் கனமழை! உயரும் பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனாவிற்கான போராட்டம் இன்னமும் ஓயாத நிலையில் அஸ்ஸாமில் பலத்த கனமழை தொடர்ந்து 2 நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அஸ்ஸாம் பகுதியில் பராக் பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் சீரடையாத நிலையில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். ஏற்கனவே வெள்ளத்தால் சுமார் 3.5 லட்சம்
 

தொடரும் கனமழை! உயரும் பலி எண்ணிக்கை!ந்தியாவில் கொரோனாவிற்கான போராட்டம் இன்னமும் ஓயாத நிலையில் அஸ்ஸாமில் பலத்த கனமழை தொடர்ந்து 2 நாட்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் தெற்கு அஸ்ஸாம் பகுதியில் பராக் பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் சீரடையாத நிலையில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.

ஏற்கனவே வெள்ளத்தால் சுமார் 3.5 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 பேர். அஸ்ஸாமில் மட்டும் சுமார் 350 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பயிர்கள் நாசமடைந்துள்ளன.

மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் உடனடியாக செய்து தரப்படும் என அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web