தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால், வடக்கு கர்நாடகா, தெலங்கானா பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமான், நிக்கோபார் தீவுகள், கோவா, தெற்கு கொங்கன், தெற்கு குஜராத், மராத்வாடா, மேற்கு வங்காளத்தின் இமாலய அடிவாரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம் பகுதிகளில் கனமழை அல்லது கூடுதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதி, அரபிக்கடலின்
 

சென்னை: தமிழ்நாட்டின் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால், வடக்கு கர்நாடகா, தெலங்கானா பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அந்தமான், நிக்கோபார் தீவுகள், கோவா, தெற்கு கொங்கன், தெற்கு குஜராத், மராத்வாடா, மேற்கு வங்காளத்தின் இமாலய அடிவாரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம் பகுதிகளில் கனமழை அல்லது கூடுதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.  வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதி, அரபிக்கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் கடல் சீற்றத்துடனும் கடும் காற்றுடனும் இருக்கும். மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள்.

தென் மேற்கு பருவமழை மேற்கு மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ளது.

– வணக்கம் இந்தியா

 
 

From around the web