சிக்கிமில் பெரும் மழை, நிலச்சரிவு… சாலைகள் துண்டிப்பு, மக்கள் பெரும் அவதி

காங்டாக்: தொடர் மழை காரணமாக சிக்கிம் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நிலச்சரிவால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு பெரும் மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா, நாகாலாந்து என பல மாநிலங்களில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வடக்கு சிக்கிமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. டி ஷோங்குவில் உள்ள பாஸிங்டாங் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 50 வீடுகளும், பள்ளி கட்டடங்களும் சேதமுற்று
 


காங்டாக்: தொடர் மழை காரணமாக சிக்கிம் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நிலச்சரிவால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு பெரும் மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா, நாகாலாந்து என பல மாநிலங்களில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வடக்கு சிக்கிமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. டி ஷோங்குவில் உள்ள பாஸிங்டாங் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 50 வீடுகளும், பள்ளி கட்டடங்களும் சேதமுற்று இருப்பதாக உள்ளூர் வட்டார தகவல் தெரிவிக்கிறது. மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் குறித்த விவரம் ஏதுமில்லை. சோங்கு பகுதியில் சாலைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளன.

இது போல் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜீலிங்க மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

– வணக்கம இந்தியா

From around the web