10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஹால் டிக்கெட் வழங்கப்படும்!தேர்வுத் துறை அறிவிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஜூன் 1ம் தேதி தேர்வுகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மறுபடியும் ஜூன்15ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதற்காக தேர்வு எழுத இருக்கும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் அனைத்தும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து
 

10ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஹால் டிக்கெட் வழங்கப்படும்!தேர்வுத் துறை அறிவிப்பு!கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

ஜூன் 1ம் தேதி தேர்வுகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மறுபடியும் ஜூன்15ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இதற்காக தேர்வு எழுத இருக்கும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் அனைத்தும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மாணவர்கள் விடுதிகள் ஜூன் 11ம் தேதி முதல் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் சொந்த ஊர் திரும்பியிருந்தாலும் அவரவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே தேர்வு எழுதவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்க வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆணை பிறப்பித்துள்ளது.

A1TamilNews.com

 

From around the web