ஹெச்4 விசாவில் வேலை பார்ப்பவர்களுக்கு தற்காலிக நிம்மதி!

அமெரிக்காவில் ஹெச்1 பி விசாவில் வேலை பார்ப்பவர்கள், க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், ஹெச் 4 விசாவில் அங்கே இருக்கும் அவர்களுடைய மனைவி அல்லது கணவன் EAD மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பை அதிபர் ஒபாமா ஏற்படுத்தித் தந்தார். ஹெச் 4 விசாவில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடாது என்று Save Jobs USA அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு மீது தற்போது வாஷிங்டன் டிசி சர்க்யூட் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிபர்
 

ஹெச்4 விசாவில் வேலை பார்ப்பவர்களுக்கு தற்காலிக நிம்மதி!மெரிக்காவில் ஹெச்1 பி விசாவில் வேலை பார்ப்பவர்கள், க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், ஹெச் 4 விசாவில் அங்கே இருக்கும் அவர்களுடைய மனைவி அல்லது கணவன் EAD மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பை அதிபர் ஒபாமா ஏற்படுத்தித் தந்தார்.

ஹெச் 4 விசாவில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடாது என்று Save Jobs USA அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு மீது தற்போது வாஷிங்டன் டிசி சர்க்யூட் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிபர் ட்ரம்பும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்வதற்காக வாஷிங்டன் டிசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மறுவிசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளது.

வாஷிங்டன் டிசி மாவட்ட நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  வழக்கு மீண்டும் மறுவிசாரணைக்கு வந்துள்ளதால், ஹெச்4 விசாவில் இருப்பவர்களின் EAD மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பு தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் டிசி மாவட்ட நீதிமன்றத்தின் மறுவிசாரணை முடிவடையும் வரையிலும் அல்லது இடைக்கால உத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்படும் வரையிலும் இந்த நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.

ஹெச்4 விசா – EAD மூலம் பெரும்பாலும், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண்கள் பலனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

 

 

 

From around the web