இனிமேல் ஹெச்1, எல்1 விசாவில் அமெரிக்கா போக முடியுமா? கிடுக்கிப்பிடி போடும் புதிய சட்ட மசோதா தாக்கல்!

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றதில் ஹெச்1, எல்1 விசா சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு கட்சி உறுப்ப்பினர்களும் இணைந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் வழங்கப்படும் 85 ஆயிரம் ஹெச் 1 விசாக்களில் 65 சதவீதம் இந்தியர்களுக்கே கிடைத்து வருவதாக ஒரு தகவல் இருக்கிறது. பெரும்பாலும் இந்திய ஐடி நிறுவனங்கள் இதை பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கர்களின் வேலையை இந்தியாவுக்கு எடுத்து
 
இனிமேல் ஹெச்1, எல்1 விசாவில் அமெரிக்கா போக முடியுமா? கிடுக்கிப்பிடி போடும் புதிய சட்ட மசோதா தாக்கல்!
macro view of a segment of a US visa in a UK passport

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றதில் ஹெச்1, எல்1 விசா சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு கட்சி உறுப்ப்பினர்களும் இணைந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு தோறும் வழங்கப்படும் 85 ஆயிரம் ஹெச் 1 விசாக்களில் 65 சதவீதம் இந்தியர்களுக்கே கிடைத்து வருவதாக ஒரு தகவல் இருக்கிறது. பெரும்பாலும் இந்திய ஐடி நிறுவனங்கள் இதை பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கர்களின் வேலையை இந்தியாவுக்கு எடுத்து வருவதாக குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. அமெரிக்கரிகளிடமே பயிற்சி பெற்றுக் கொண்டு, அவர்களை வேலையிலிருந்து நீக்குகிறார்கள் என்பதே இந்த குற்றச்சாட்டு ஆகும்.

இது தவிர அமெரிக்காவில் உயர்படிப்பு படித்து முடிப்பவர்களுக்கும் வேலை வாய்ப்பும் விசாவும் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மாணவர்களாகச் சென்று அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து வேலை கிடைத்தாலும் ஹெச்1 விசா கிடைக்காமல் இருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆண்டுக்கு 20 ஆயிரம் ஹெச்1 விசாக்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மூலம், அமெரிக்கர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஹெச்1 விசா ஊழியர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்துவதற்கு யுஎஸ்சிஐஎஸ்-க்கு கூடுதல் அதிகாரங்கள், கண்காணிப்பு விதிமுறைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் ஹெச்1 விசா வழங்குவதில் அமெரிக்காவில் உயர்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்க்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

50 ஊழியர்களுக்கும் மேலாக உள்ள நிறுவனங்களில் ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஹெச்1 விசாவில் இருந்தால், அந்த நிறுவனங்கள் புதிய ஹெச்1 விசா விண்ணப்பிக்க தடை செய்யப்படுகிறார்கள்.  அதே வேளையில் ஹெச்1 விசா பணியாளர்களுக்கு அமெரிக்க பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுவதையும் இந்த சட்டம்  மூலம்உறுதி செய்யப்பட உள்ளது.

இதைப் போல், எல்1 விசா மூலம் நிறுவனங்களின் வெளிநாட்டுக் கிளையிலிருந்து அமெரிக்க கிளைக்கு மாற்றம் செய்யப்படுபவர்களுக்கும் விதிமுறைகள் கடுமையாகப்பட்டுள்ளன. ஊதியம், பணித்திறன் உள்ளிட்டவைகள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. எல்1 விசாவுக்கு என்று ஆண்டு எண்ணிக்கை எதுவும் இல்லை என்பதால், இந்த விசா விண்ணப்பிக்கும் போது கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிய வருகிறது.

இந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்க ஊழியர்களும், ஹெச்1 விசா ஊழியர்களும் பல அடைவார்கள் என்று மசோதாவை இணைந்து தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் உறுப்பினரும், அமெரிக்க இந்தியருமான ரோ கண்ணா கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு மாணவர்களாக உயர்படிப்புக்கு செல்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளும், இந்திய ஐடி நிறுவனங்களிலிருந்து புதிதாக ஹெச்1 விசா, எல்1 விசாக்களில் செல்ல விரும்புகிறவர்களுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

A1TamilNews.com

 

From around the web