அமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை

நியூயார்க்: இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து கயானாவுக்குச் சென்ற தமிழர்களின் வம்சாவளியினர் நியூயார்க் நகரில் பெருவாரியாக வசித்து வருகிறார்கள். கயானாவிலும் நியூயார்க் நகரிலும் மாரியம்மன் கோவில் நிர்மாணித்து தமிழர் வழக்கப்படி வழிபாடுகள் செய்து வருகிறார்கள். மாரியம்மனுடன், சுடலை மாடன், கருப்பசாமி, மதுரை வீரன் ஆகிய தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.இந்த கோவில் விழாவில் பறை இசை முக்கிய அம்சமாகும். இளைஞர்கள் தான் பெரும்பாலும் பறை இசைக்கிறார்கள். நியூயார்க் நகரில் வசித்து வந்த, ஜொனாதன் நாராயண் என்ற கயானா தமிழ்
 
 
நியூயார்க்: இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு  தமிழகத்திலிருந்து  கயானாவுக்குச்  சென்ற தமிழர்களின் வம்சாவளியினர்  நியூயார்க் நகரில் பெருவாரியாக வசித்து வருகிறார்கள்.  கயானாவிலும் நியூயார்க் நகரிலும் மாரியம்மன் கோவில் நிர்மாணித்து தமிழர் வழக்கப்படி வழிபாடுகள் செய்து வருகிறார்கள். 
 
மாரியம்மனுடன், சுடலை மாடன், கருப்பசாமி, மதுரை வீரன் ஆகிய தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.இந்த கோவில் விழாவில்  பறை இசை  முக்கிய அம்சமாகும். இளைஞர்கள் தான் பெரும்பாலும் பறை இசைக்கிறார்கள்.
 
நியூயார்க் நகரில் வசித்து வந்த, ஜொனாதன் நாராயண் என்ற கயானா தமிழ் வம்சாவளி இளைஞரும் மாரியம்மன் கோவிலில் பறை இசைப்பவர்களில் ஒருவராவார். அங்கு நியூயார்க் போலிஸ் துறையில் சீர்திருத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.  சம்பவத்தன்று,  வேலைக்கு சென்ற ஜொனாதன், வழியில்  உணவு வாங்குவதற்கு காரை நிறுத்தியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கியை எடுத்து நேராக ஜொனதானை நோக்கி  தலையில் சுட்டுள்ளார்.
அமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை
 தலையில் பாயந்த குண்டு ஜொனாதனை பலி கொண்டது. ஜொனாதனின் பெற்றோர் கயானா நாட்டில் பிறந்த வம்சாவளி தமிழர்கள். நியூயார்க் நகரில் குடியேறியவர்கள். ஜொனாதனும் அவருடைய தம்பி ஜேசனும் நியூயார்க் நகரில் பிறந்த அமெரிக்க குடிமக்கள். ஜொனாதனின் திடீர் மறைவு கயானா தமிழ்ச் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை
 ஜொனாதனின் இறுதிச் சடங்கிலும் இறுதி ஊர்வலத்திலும் கயானா தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நியூயார்க் போலீஸ் துறையினர் வரிசையாக அணிவகுத்து ஜொனாதனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இளைஞர்கள் பறை இசைத்து தங்கள் நண்பருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
 
English Summery:
 
Jonathan Narain, 27 year old Guyanese Tamil immigrant born in New York was killed by unidentified gun man  with a single shot in head. Jonathan was working as Correction Officer and New York Police Department  police officers paid respect with salute in his final journey. Jonathan used to play traditional drums in Mariamman Temple and Madrasi Festivals in New York. His friends payed last respect by playing the traditional drums.
 

From around the web