இது தான் குஜராத் மாடல் வென்டிலேட்டரோ? சாடும் எதிர்க்கட்சியினர்!!

இந்தியாவின் மாடல் மாநிலமாக பிரச்சாரம் செய்யப்பட்ட குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் தள்ளாடி வருவது தெரிகிறது. முன்னதாக எம்ய்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இருவர் சிறப்பு விமானப்படை விமானத்தில் அகமதாபாத்துக்கு வந்தனர். தற்போது குஜராத் மாநிலத்தில் வெண்டிலேட்டர் கருவியில் பிரச்சனை இருப்பதால் உயிர்ப்பலிகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் குஜராத் உள்ளது. அங்கே இதுவரை கொரோனாவால் 915 பேர் பலியாகியுள்ளனர்.மாநில அரசு
 

இது தான் குஜராத் மாடல் வென்டிலேட்டரோ? சாடும் எதிர்க்கட்சியினர்!!ந்தியாவின் மாடல் மாநிலமாக பிரச்சாரம் செய்யப்பட்ட குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் தள்ளாடி வருவது தெரிகிறது. முன்னதாக எம்ய்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இருவர் சிறப்பு விமானப்படை விமானத்தில் அகமதாபாத்துக்கு வந்தனர். தற்போது குஜராத் மாநிலத்தில் வெண்டிலேட்டர் கருவியில் பிரச்சனை இருப்பதால் உயிர்ப்பலிகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் குஜராத் உள்ளது. அங்கே இதுவரை கொரோனாவால் 915 பேர் பலியாகியுள்ளனர்.மாநில அரசு கொரோனாவை கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடல் அகமதாபாத்தில் தெருவில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டமாக வென்டிலேட்டர் மெஷினில் குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஜோதி சி.என்.சி என்ற நிறுவனம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வென்ட்டிலேட்டர் கருவிகளை தயாரித்தது. இந்நிறுவனம் 10 – 15 நாட்களில் 1,000 வென்டிலேட்டர்களை தயாரித்து அகமதாபாத் அரசு மருத்துமனைக்கு வழங்கியது.

இந்த வென்ட்டிலேட்டர்களை அம்மாநில முதல்வர் விஜய் ருபானி பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, சி.என்.சி நிறுவனம் தயாரித்த தமன் -1 வென்ட்டிலேட்டர் கருவிகள் உயிர்காக்க ஏதுவாக இல்லை என்று அகமதாபாத் பொது மருத்துவமனை மருத்துவர்கள் குஜராத் துணை முதல்வர் நிதின் படேலுக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பினார்கள்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சி, கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதில் குஜராத் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டியது. முதல்வர் விஜய் ருபானி தனது நண்பர்களின் நிறுவனங்களின் கருவிகளை விற்க உதவுவதாகவும், தரமற்ற வென்டிலேட்டர்களுக்கு ஒப்புதல் வழங்கி மக்களின் உயிர்களைப் பணையம் வைப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பரேஷ் தனனி மற்றும் அமித் சாவ்டா ஆகியோர் குற்றம்சாட்டினர்.

தரமற்ற வென்ட்டிலேட்டர்களை வாங்கிய விவகாரத்தில் அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குஜ்ராத் மாடல் என்று பிரதமர் மோடியின் சாதனையாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட மாநிலத்தில் கொரோனா தொற்றுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

A1TamilNews.com

From around the web