மத்திய அமெரிக்காவில் வெடித்த எரிமலை .. குவாட்டமாலா பலி 69..

எல் ரோடியோ: மத்திய அமெரிக்காவில் உள்ள குவாட்டமாலா நாட்டில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 69 பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது. பேரிடர் சீரமைப்புக் குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்பதற்கு போராடி வருகிறார்கள். இறந்தவர்கள் உடல்களில் எரிமலையின் சாம்பல் ஒட்டிக்கொண்டிருப்பதால், சிலை போல் மாறிவிட்டது. பலியான 69 பேர்களில், இது வரையிலும் 17 பேர் மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. கைரேகைகள் கூட அழிந்து விட்ட
 

மத்திய அமெரிக்காவில் வெடித்த எரிமலை .. குவாட்டமாலா பலி 69..

எல் ரோடியோ: மத்திய அமெரிக்காவில் உள்ள குவாட்டமாலா நாட்டில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 69 பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது. பேரிடர் சீரமைப்புக் குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் வெடித்த எரிமலை .. குவாட்டமாலா பலி 69..இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்பதற்கு போராடி வருகிறார்கள். இறந்தவர்கள் உடல்களில் எரிமலையின் சாம்பல் ஒட்டிக்கொண்டிருப்பதால், சிலை போல் மாறிவிட்டது. பலியான 69 பேர்களில், இது வரையிலும் 17 பேர் மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. கைரேகைகள் கூட அழிந்து விட்ட நிலையில் யாருடைய உடல் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறதாக கூறுகிறார்கள். டிஎன்ஏ ஆய்வு மூலம் தான் கண்டறிய வாய்ப்புள்ளது.

மத்திய அமெரிக்காவில் வெடித்த எரிமலை .. குவாட்டமாலா பலி 69..எரிவாயு, புகை, சாம்பல், பெரிய பாறைகளுடன் வெடித்த எரிமலை, சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை மூழ்கடித்து விட்டது. ஏராளமானோர் காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

மத்திய அமெரிக்காவில் வெடித்த எரிமலை .. குவாட்டமாலா பலி 69..அந்தப் பகுதியிலிருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். அதிபர் ஜிம்மி மொராலெஸ் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மத்திய அமெரிக்காவில் இன்னும் நெருப்புக் குழம்புகளுடன் தகித்துக் கொண்டிருக்கும் எரிமலை இது. அவ்வப்போது நெருப்பை உமிழ்ந்தாலும், இந்த தடவை தான் வீரியமாக வெடித்துச் சிதறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

 

From around the web