கொங்கு மண்டலத்தில் பெருகும் ஆதரவு.. ரஜினிகாந்துக்கு மூதாட்டி கோரிக்கை!

ஈரோடு: தமிழகத்தின் முக்கிய வாக்கு வங்கியான கொங்கு மண்டலத்தில் ரஜினிகாந்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தெரிய வந்துள்ளது. மூதாட்டி ஒருவர் ரஜினிகாந்த் முதல்வர் ஆகி தங்கள் 75 ஆண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார். ‘அரசியலுக்கு வருவேன், தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று அறிவித்து 6 மாதங்கள் ஆகப் போகிறது. மாவட்ட அளவில் கடைசி நிலை கட்டமைப்பான பூத் கமிட்டி வரையிலும் நிர்வாகிகள் நியமித்து பலம் வாய்ந்த அமைப்பாக
 
ஈரோடு: தமிழகத்தின் முக்கிய வாக்கு வங்கியான கொங்கு மண்டலத்தில் ரஜினிகாந்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தெரிய வந்துள்ளது. மூதாட்டி ஒருவர் ரஜினிகாந்த் முதல்வர் ஆகி தங்கள் 75 ஆண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார்.
 
‘அரசியலுக்கு வருவேன், தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று  அறிவித்து 6 மாதங்கள் ஆகப் போகிறது. மாவட்ட அளவில் கடைசி நிலை கட்டமைப்பான பூத் கமிட்டி வரையிலும் நிர்வாகிகள் நியமித்து பலம் வாய்ந்த அமைப்பாக ரஜினி மக்கள் மன்றத்தை அவர் உருவாக்கியுள்ளார். 
 
தூத்துக்குடி தொடர்பான பேட்டிக்கு எதிர்தரப்பிலும் மீடியாவிலும் ரஜினிகாந்துக்கு எதிரான கருத்துகள் வந்த போதிலும் பொது மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த மூதாட்டி ஒருவரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியுள்ளதன் விவரம் வருமாறு:
கொங்கு மண்டலத்தில் பெருகும் ஆதரவு.. ரஜினிகாந்துக்கு மூதாட்டி கோரிக்கை!
“நாங்கள்  ஈரோடு மாவட்டம் பாப்பாத்திகாடு கிராமத்தைச் சார்ந்தவர்கள். 75 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். இது வரையிலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டோம். எந்த சலுகையும் கிடைக்கவில்லை. எங்களை ஏமாற்றி விட்டார்கள்.
 
இப்போது ரஜினிகாந்த் ஆட்சிக்கு வரனும்ன்னு நாங்க விரும்புகிறோம். அவர் முதலமைச்சாரக வேண்டும். அவர் வந்தால் எங்களுடைய 75 ஆண்டுகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார் என நம்புகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அவர் உருவாக்கித் தருவார் என எதிர்பார்க்கிறோம். 
 
இந்த தடவை நாங்க ரஜினி அய்யாவுக்குத் தான் ஓட்டுப் போடப்போறோம். எங்க ஊர்ல ஆயிரம் ஓட்டு இருக்கு. எல்லோருமே அவருக்குத் தான் ஓட்டுப் போடுவோம். அவர் முதலமைச்சர் ஆகி எங்க எல்லாரோட பிரச்சனைகளையும் தீர்க்கனும்”
 
ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டலம் எம்ஜிஆர், ஜெயலலிதா என தொடர்ந்து அதிமுகவுக்கு தொடர்ந்து பெரும் ஆதரவை கொடுத்து வந்துள்ளது. ஜெயலலிதா சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட போது கூட இந்த பகுதியில் தான் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றார்.  இரட்டை இலை மட்டுமல்ல சேவல் சின்னத்திற்கும் வாக்களித்த மக்கள் அவர்கள். ஆக, சின்னம் அவர்களுக்கு முக்கியமல்ல, எந்த தலைவர் என்பதை தீர்க்கமாக கணித்தே வாக்களித்து வருகிறார்கள் எனத் தெரிகிறது.
 
தொடர்ந்து அதிமுகவுக்கு வாக்களித்த சாமானிய மக்களின் ஓருவரான இந்த மூதாட்டி  ரஜினிகாந்துக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மாற்றாக அந்தப் பகுதி மக்களின் தேர்வு ரஜினிகாந்த் என்றும் தெரிய வருகிறது.
 
ரஜினிகாந்த் இன்னும் கட்சிப் பெயரே அறிவிக்க வில்லை. அரசியலுக்கு வருகிறேன் என்ற அறிவிப்பே சாமானிய மக்களை அவர் பக்கம் திருப்பியுள்ளது தமிழக அரசியலுக்கு மிகவும் புதிது. அதே சமயம் இதுவரையிலும் எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்ற பரிதவிப்பு, ரஜினிகாந்திடம் அதிமாக எதிர்ப்பார்க்கிறார்கள் என்றும் தெரிகிறது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலம் ரஜினிகாந்த் பக்கம் திரும்புமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
 
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் இறங்கியுள்ளதால், அடுத்த தேர்தலில் தமிழக அரசியலில்  ‘புதிய அத்தியாயம்’ தொடங்குவது உறுதி. மக்கள் ஆதரவு யாருக்கு என்ற புதிருக்கு விடையும் தெரிந்து விடும்.
 
– வணக்கம் இந்தியா
 
 
 

From around the web