வட மாநிலங்களில் ‘பசுமை பெருஞ்சுவர்’ !

அகமதாபாத்: குஜராத்தில் இருந்து ஹரியானா வரை ‘பசுமை பெருஞ்சுவர்’ கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பசுமை பெருஞ் சுவரை எழுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பாகிஸ்தான், ராஜஸ்தானில் பறந்து விரிந்திருக்கும் தார் பாலைவனத்திலிருந்து மணல் காற்று வீசுவதில் இருந்தும், பஞ்சாபில் அறுவடை முடிந்து பயிர்களை எரிப்பதால் எழும் புகையிலிருந்தும் அண்டை மாநிலங்கள் மாசடைகின்றன. இதைத் தடுக்கும் வகையில் பசுமை பெருஞ் சுவரை எழுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக
 

வட மாநிலங்களில் ‘பசுமை பெருஞ்சுவர்’ !

அகமதாபாத்: குஜராத்தில் இருந்து ஹரியானா வரை ‘பசுமை பெருஞ்சுவர்’ கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பசுமை பெருஞ் சுவரை எழுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பாகிஸ்தான், ராஜஸ்தானில் பறந்து விரிந்திருக்கும் தார் பாலைவனத்திலிருந்து மணல் காற்று வீசுவதில் இருந்தும், பஞ்சாபில் அறுவடை முடிந்து பயிர்களை எரிப்பதால் எழும் புகையிலிருந்தும் அண்டை மாநிலங்கள் மாசடைகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் பசுமை பெருஞ் சுவரை எழுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக குஜராத்தின் போர்பந்தரில் இருந்து ஹரியானாவின் பானிபட் வரை சுமார் ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு காடுகளை உருவாக்கி தடுப்பு அமைக்கப்படுகிறது.

ஆரவள்ளி மலையையொட்டி குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை இந்த பசுமை பெருஞ் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web