ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக சிபிஐ விசாரணை கூடாது – மத்திய அரசு பதில் மனு!

டெல்லி: ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யுமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோர் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் வழக்கறிஞர் வினீத் தாந்தா ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இந்து நாளிதழ் வெளியிட்டு இருந்த ஆவணங்களை சாட்சியாகவும் இணைத்து இருந்தார்கள். உச்சநீதிமன்றம் அந்த ஆவணங்களை சாட்சியாக எடுத்துக் கொண்டது. மனுக்கள்
 

டெல்லி: ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யுமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோர் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் வழக்கறிஞர் வினீத் தாந்தா ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தார்கள்.

இந்து நாளிதழ் வெளியிட்டு இருந்த ஆவணங்களை சாட்சியாகவும் இணைத்து இருந்தார்கள். உச்சநீதிமன்றம் அந்த ஆவணங்களை சாட்சியாக எடுத்துக் கொண்டது. மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதால் மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்பு எழுத்துப் பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்யலாம் என்று கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

“ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களான முடிவெடுக்கும் பணி, விலை, இந்திய பங்குதாரர் தேர்வு ஆகியவற்றில் உச்சநீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை என்ற டிசம்பர் 14ம் தேதி தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான காரணம் எதையும் மனுதாரர்கள் கூறவில்லை.

மறு ஆய்வு என்ற போர்வையில் ரகசிய கோப்புகளில் எடுக்கப்பட்ட ஜெராக்ஸ் காப்பி, பத்திரிக்கை செய்தி ஆகியவற்றை நம்பி மீண்டும் இந்த விவகாரத்தை ஆய்வு கோர முடியாது. குழம்பிய குளத்தில் மீன் பிடிக்கும் முயற்சி.

விலை விஷயத்தை ஆய்வு செய்த தணிக்கைக் குழு 2.86 சதவீதம் விலை குறைவாக இருப்பதாக கூறியுள்ளது. ரஃபேல் விமானம் வாங்கிய ஒப்பந்தத்தை சந்தேகத்திற்குரியதாக்கினால் இந்திய விமானப்படைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இந்த விவகாரம் குறித்து எப்ஐஆர் பதிவு செய்வது அல்லது சிபிஐ விசாரணை நடத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை,” என்று எழுத்துப் பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

இந்த மறு சீராய்வு மனுக்கம் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

– வணக்கம் இந்தியா

From around the web