பிரதமர் மோடிக்கு டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட் வரவேற்பு!

ஆஸ்டின்: பிரதமர் மோடி யின் ஹூஸ்டன் வருகையை டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட், செனட்டர் ஜான் கோரினின், ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னர் வரவேற்றுள்ளார்கள். பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகை தரும் பொதுமக்களுக்கு இருக்கை எண்ணுடன் அனுமதிச் சீட்டுகள் இமெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கலைநிகழ்ச்சிகள் நடத்தும் குழுவினர் பம்பரமாக சுழன்று பயிற்சி எடுத்து வருகிறார்கள். பிரதமர் வருகைக்காக இரண்டு பாடல்கள் புதியதாக இயற்றி இசையமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் போது நடனங்களுடன் அரங்கேற
 

பிரதமர் மோடிக்கு டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட் வரவேற்பு!ஆஸ்டின்: பிரதமர் மோடி யின் ஹூஸ்டன் வருகையை டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட், செனட்டர் ஜான் கோரினின், ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னர் வரவேற்றுள்ளார்கள்.

பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகை தரும் பொதுமக்களுக்கு இருக்கை எண்ணுடன் அனுமதிச் சீட்டுகள் இமெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கலைநிகழ்ச்சிகள் நடத்தும் குழுவினர் பம்பரமாக சுழன்று பயிற்சி எடுத்து வருகிறார்கள். பிரதமர் வருகைக்காக இரண்டு பாடல்கள் புதியதாக இயற்றி இசையமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் போது நடனங்களுடன் அரங்கேற உள்ளது.

வெளியூரிலிருந்து வரும் மக்கள் ஹூஸ்டனுக்கு பொதுமக்கள் வர ஆயத்தமாக உள்ளனர். வெள்ளிக்கிழமை முதலாகவே ஹூஸ்டனுக்கு சாலை வழியிலும் விமானத்திலும் மக்கள் வர இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் டெக்சாஸ் அரசுத் தரப்பிலும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட் “பிரதமர் மோடியை கடந்த ஆண்டு இந்தியாவில் சந்தித்துப் பேசும் பெருமை கிடைத்தது. பிரதமர் மோடியின் டெக்சாஸ் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். டெக்சாஸ் மாநிலத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான கலாச்சார, பொருளாதார நல்லுறவு மேலும் வலுவடையும்,” என்று கூறியுள்ளார்.

டெக்சாஸ் செனட்டர் ஜான் கோர்னின், ” டெக்சாஸில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்திய அமெரிக்கர்கள் சார்பிலும், செனட் அவையின் இந்தியா குழுவின் துணைத் தலைவராகவும் பிரதமர் மோடியின் ஹூஸ்டன் வருகையை வரவேற்கிறேன். பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா அமெரிக்காவின் மிகவும் முக்கியமான நட்பு நாடாகும். பிரதமர் மோடியின் டெக்சாஸ் வருகை மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலப்படுவதை காண தயாராக உள்ளேன்,” என்று வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஹூஸ்டன் மாநகர மேயர் சில்வெஸ்டர் டர்னர், “அமெரிக்காவின் மிகவும் துடிப்பான் இந்திய சமூகத்தைக் கொண்ட ஹூஸ்டன் நகருக்கு பிரதமர் மோடியின் வருகையை எதிர் நோக்குகிறேன். அவருடைய வருகை, இந்திய சமூகத்திற்கு மட்டுமல்லாமல் இந்த வட்டாரத்திற்கே முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமரின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வருகை மூலம் ஹூஸ்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக, கலாச்சார மற்றும் சுற்றுலா தொடர்பான உறவு மேலும் பலப்படும், ஒவ்வொரு ஹூஸ்டன் குடிமக்களுக்கும் பயன்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையினால் டெக்சாஸில் ஒரு அதிர்வலை உருவாகியுள்ளது என்றே சொல்லலாம்.

தொடர்புடைய செய்தி:

பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் – ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்பு

From around the web