ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படும் பள்ளிகளும் கொரோனா தொற்றால் தற்போது திறக்கப்பட சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இணையவழி வகுப்புக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக்
 

ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படும் பள்ளிகளும் கொரோனா தொற்றால் தற்போது திறக்கப்பட சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இணையவழி வகுப்புக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்பு நடத்தப்படும் எனவும், தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்றும் 1முதல்8 ம் வகுப்பு வரை 1.30 மணி நேரமும், 9முதல்12 ம் வகுப்பு வரை 3 மணி நேரமும் வகுப்புக்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு வகுப்புகளுக்கான நேரம் 30 முதல் 45 நிமிடங்களாக தான் இருக்கும் எனவும், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6 வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர ஒவ்வொரு வகுப்புக்கும் இடையேயும் 15 நிமிடங்கள் வரை இடைவேளை விடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web