இலங்கை அதிபராக பதவியேற்றுக்கொண்டார் கோத்தபய ராஜபக்சே!

இலங்கை: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்ச அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபரும் கோத்தபயவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்புக்கு பிறகு உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே தமிழர்களின் வாக்கு தனக்கு கிடைக்காததை சுட்டிக்காட்டி பேசினார். இனிவரும் காலங்களில் தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். தேசிய பாதுகாப்பை
 

இலங்கை அதிபராக பதவியேற்றுக்கொண்டார் கோத்தபய ராஜபக்சே!இலங்கை: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்ச அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபரா‌க பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபரும் கோத்தபயவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பதவியேற்புக்கு பிறகு உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே தமிழர்களின் வாக்கு தனக்கு கிடைக்காததை சுட்டிக்காட்டி பேசினார். இனிவரும் காலங்களில் தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்துவதே தனது முதலாவது திட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சேவின் பிறந்தநாளையொட்டி கோத்தபயவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் தனது படமோ அல்லது பிரதமரின் படமோ, அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் என கோத்தபய அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அலுவலகங்களில் அரசின் தேசிய சின்னம் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

A1TamilNews.com

From around the web