கூகுள் நிறுவனத்தின் அதிரடித் திட்டம்! ஆட்டம் காணுமோ சிலிக்கான்வேலி!!

கணிணி நிறுவனங்களின் உலகத் தலைமையிடமாக விளங்கும் சிலிக்கான்வேலியில், கூகுள் நிறுவனத்தின் அதிரடித் திட்டத்தால் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று கருதப்படுகிறது. கொரோனா பரவலையொட்டி கலிஃபோர்னியாவில் பிப்ரவரி மாதம் தொடங்கிய ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. குறைந்த எண்ணிக்கையுடன் முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வீட்டிலிருந்து வேலை பார்க்கக்கூடியவர்கள் அலுவலகங்கள் வர வேண்டாம் என்று அனைத்து நிறுவனங்களும் அறிவுறுத்தியுள்ளன. செப்டம்பர் மாதம் வரையிலும் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்துள்ளார்கள். இந்நிலையில் அடுத்த ஆண்டு
 

கூகுள் நிறுவனத்தின் அதிரடித் திட்டம்! ஆட்டம் காணுமோ சிலிக்கான்வேலி!!கணிணி நிறுவனங்களின் உலகத் தலைமையிடமாக விளங்கும் சிலிக்கான்வேலியில், கூகுள் நிறுவனத்தின் அதிரடித் திட்டத்தால் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

கொரோனா பரவலையொட்டி கலிஃபோர்னியாவில் பிப்ரவரி மாதம் தொடங்கிய ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. குறைந்த எண்ணிக்கையுடன் முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வீட்டிலிருந்து வேலை பார்க்கக்கூடியவர்கள் அலுவலகங்கள் வர வேண்டாம் என்று அனைத்து நிறுவனங்களும் அறிவுறுத்தியுள்ளன. 

செப்டம்பர் மாதம் வரையிலும் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்துள்ளார்கள். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் என்று கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது மேலும் ஓராண்டுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதித்துள்ளார்கள்.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் வீட்டிலிருந்தே வேலை பார்த்த பிறகு, அலுவலகத்திற்கு வர வேண்டுமா என்ற நிலை கட்டாயம் ஏற்படும். பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே வேலை செய்யும் பழக்கத்திற்கு மாறிவிடுவார்கள். அலுவலகங்களின் தேவை இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. இதனால் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் சந்தை பெருமளவில் சரியும் என்றும் கணிக்கப்படுகிறது.

கூகுள் நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் போனால், அந்த அலுவலகத்தை ஒட்டியுள்ள ரெஸ்டாரண்டுகள் உள்ளிட்ட மற்ற சிறு வணிக நிறுவங்கள் நஷ்டத்தில் இயங்கி மூடப்படும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தைப் பின்பற்றி ஃபேஸ்புக், நெட்ஃபிளிக்ஸ், ஆப்பிள் போன்ற பெரும் நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கலிஃபோர்னியாவின் சிலிக்கான் வேலியின் பொருளாதாரத்தையே  மாற்றி அமைக்கும் வகையில் கூகுளின் திட்டம் அமையும் என்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு எப்படிப்பட்ட அணுகுமுறை இருக்கும், ஹெச்1 விசாவில் தேர்ந்தெடுக்கப்படும் வெளிநாட்டு இளைஞர்களின் நிலை என்னாகும் போன்ற கேள்விகளும் எழுகின்றது.

ஒரே ஒரு அறிவிப்பில் கணிணி நிறுவனங்களின் மாபெரும் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது கூகுள்.

A1TamilNews.com

 

 

From around the web