யார் அந்த இடியட்? கூகுள் சொல்ற பதிலைப் பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!

வாஷிங்டன்: கூகுளீல் idiot என்று டைப் செய்து தேடினால் கூகுள் Images பகுதியில் வரும் படங்கள் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பல்வேறு படங்களை, அவருடைய அஷ்டகோணல் முகபாவனைகளுடன் கூகுள் காட்டுகிறது. இது எப்படி ஆச்சுன்னு கேட்டால் ‘அல்காரிதம்’ என்று சொல்கிறார்கள். அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருவாரியான மக்களால் இடியட் என்று இணையத் தளங்களில் குறிப்பிடப் பட்டுள்ளதால் இந்த மாதிரி கூகுள் விடையளிக்கிறது. இங்கிலாந்து சென்ற அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அந்நாட்டு
 
யார் அந்த இடியட்? கூகுள் சொல்ற பதிலைப் பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!
வாஷிங்டன்:  கூகுளீல் idiot என்று டைப் செய்து தேடினால் கூகுள் Images பகுதியில்  வரும் படங்கள் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்  பல்வேறு படங்களை, அவருடைய அஷ்டகோணல் முகபாவனைகளுடன் கூகுள் காட்டுகிறது.
 
இது எப்படி ஆச்சுன்னு கேட்டால் ‘அல்காரிதம்’ என்று சொல்கிறார்கள். அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருவாரியான மக்களால் இடியட் என்று இணையத் தளங்களில் குறிப்பிடப் பட்டுள்ளதால் இந்த மாதிரி கூகுள் விடையளிக்கிறது. இங்கிலாந்து சென்ற அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து இடியட் என்ற வார்த்தையுடன் ட்ரம்ப்பின் படத்தை சமூக தளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.
 
கூகுளின்  ‘அல்காரிதம்’ இந்த படங்களை idiot  வார்த்தை தேடுதலில், இணைத்து பதில் அளிக்க ஆரம்பித்து விட்டது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருவதால் இன்னமும் கூகுளில் இடியட் என்ற தேடுதலுக்கு  ட்ரம்ப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
 
ஆனாலும் இது சாதாரணமாக நடந்து விடக்கூடியது அல்ல. இதன் பின்னால் ஏதோ ஒரு வித டெக்னாலஜி தில்லு முல்லு இருக்கிறது என்று கணிணித் துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
என்ன இருந்தாலும் அமெரிக்கா உண்மையான ஜனநாயக நாடு தான் போலிருக்கு. இப்படி ஒரு முடிவை இந்தியாவுக்குள் காட்டிவிட்டு கூகுள் நிறுவனம் இங்கு இருக்க முடியுமா என்ன?
 
அமெரிக்கா அமெரிக்கா தான்..  இந்தியா இந்தியா தான்.. ஆட்டோ ஆட்டோ தான்!
 

From around the web