ஊரடங்கு காலத்திலும் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு 37 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது என்று கூறப்படும் நிலையில் தங்கம் விலை உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. ஜூன் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் 37 ஆயிரம் ரூபாயை எட்டியது. இந்த மாதம் முதல் தேதி மேலும் 424 ரூபாய் அதிகரித்தது. மேலும் அதிகரித்து 37 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ
 

ஊரடங்கு காலத்திலும் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு 37 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது என்று கூறப்படும் நிலையில் தங்கம் விலை உயர்வு அதிர்ச்சியளிக்கிறது.

ஜூன் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் 37 ஆயிரம் ரூபாயை எட்டியது. இந்த மாதம் முதல் தேதி மேலும் 424 ரூபாய் அதிகரித்தது. மேலும் அதிகரித்து 37 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 54 ஆயிரத்து 400 ரூபாயை எட்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலேயே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதால் இந்த விலையேற்றம் என்றும் கருதப்படுகிறது.

A1TamilNews.com

From around the web