கடவுளுக்கும் கம்பளி, ஸ்வெட்டர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உடல் உறைந்து போகும் அளவுக்கு உறைபனி கொட்டுகிறது. இம்மாநிலத்தில் உள்ள மக்கள் கடுங்குளிரை சமாளிக்க எந்நேரமும் ஸ்வெட்டர் அணிந்த நிலையில் இருக்க வேண்டியுள்ளது. மனிதர்களைப் போலவே கடவுளுக்கும் குளிரெடுக்கும் என்று எண்ணிய மக்கள் அங்கு அமைந்துள்ள கோயில்களில் கடவுள்களின் சிலைகளுக்கும் ஸ்வெட்டர் அணிவித்துள்ளது வியப்பை அளிக்கிறது. வாரணாசியில், படா கணேஷ் கோவிலில், கருவறைத் தெய்வம் QUILT ஆல் மூடிவைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள பிள்ளையாருக்கு மட்டுமல்ல அவரது வாகனமான மூஷிகத்திற்கும்(எலி) ஒரு கம்பளிச் சால்வை
 

 

கடவுளுக்கும் கம்பளி, ஸ்வெட்டர்!த்திரபிரதேச மாநிலத்தில் உடல் உறைந்து போகும் அளவுக்கு உறைபனி கொட்டுகிறது. இம்மாநிலத்தில் உள்ள மக்கள் கடுங்குளிரை சமாளிக்க எந்நேரமும் ஸ்வெட்டர் அணிந்த நிலையில் இருக்க வேண்டியுள்ளது.

மனிதர்களைப் போலவே கடவுளுக்கும் குளிரெடுக்கும் என்று எண்ணிய மக்கள் அங்கு அமைந்துள்ள கோயில்களில் கடவுள்களின் சிலைகளுக்கும் ஸ்வெட்டர் அணிவித்துள்ளது வியப்பை அளிக்கிறது.

வாரணாசியில், படா கணேஷ் கோவிலில், கருவறைத் தெய்வம் QUILT ஆல் மூடிவைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள பிள்ளையாருக்கு மட்டுமல்ல அவரது வாகனமான மூஷிகத்திற்கும்(எலி) ஒரு கம்பளிச் சால்வை போர்த்தப்பட்டுள்ளது.

அங்கு சிவன் கோயில்களில், சிவலிங்கங்கள் கூட கம்பளிச் சால்வையால் மூடப்பட்டுள்ளன.கடவுள் சிலைகளுக்கு உயிர் இருப்பதாகவே மக்கள் நம்புகிறார்கள்.

கடவுள் உயிருள்ளவராகக் கருதப்படுவதால் இங்கு நிலவும் வானிலை மாறுபாடுகளால் அவரது உடல்நலத்தை பேணும் வகையில் இவ்விதமாகப் பாதுகாக்கப்படுகிறார்.

அயோத்தியில், ராம் ஜன்மபூமியில் உள்ள ராம் லல்லா ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார். சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதால், காற்றைச் சூடாக வைத்திருக்க அங்கு ஒரு ஹீட் புளோயர் (Heat Blower) வைக்கப்பட்டுள்ளது.

மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள பல கிருஷ்ண விக்ரகங்களில் தெய்வத்தை மறைக்க சிறிய கம்பளி ஸ்வெட்டர்ஸ் மற்றும் சால்வைகள் போர்த்தப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் குளிரைச் சமாளிக்கத் திறந்த வெளியில் நெருப்பு மூட்டி கனப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பல பக்தர்களும் கடவுள் சிலைகளுக்கு பட்டாடைகளுக்குப் பதிலாக கம்பளி ஆடைகள் சாற்றி வழிபாடு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மத வழிபாட்டுக்கு உரிய பொருட்களை விற்கும் கடைகளளிலும் தெய்வங்களுக்கான குளிர்கால கம்பளிகள் விதவிதமான வண்ணங்களிலும் லேட்டஸ்ட் டிசைன்களில் விற்கப்படுகின்றன.

https://www.A1TamilNews.com

From around the web