கிவிங் ட்யூஸ்டே ..மைக்ரோசாஃப்டும் ஃபேஸ்புக்கும் இணைந்து 2 மில்லியன் டாலர்கள் நன்கொடை!

வாஷிங்டன் : தேங்க்ஸ் கிவிங்-க்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமை அமெரிக்காவில் கிவிங் ட்யூஸ்டே என அனுசரிக்கப் படுகிறது. நல்ல காரியங்களுக்கு நன்கொடை கொடுக்கும் நாள் என குறிக்கப்பட்டு அன்று தன்னார்வ அமைப்புகளுக்கு நன்கொடை திரட்டப் படுகிறது. இந்த நாளில் ஃபேஸ்புக் மூலம் நன்கொடை திரட்டும் அமெரிக்க தன்னார்வ அமைப்புகளுக்கு 2 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்க உள்ளார்கள். ஒவ்வொரு தன்னார்வ அமைப்புக்கும் 50 ஆயிரம் டாலர்கள் வரையிலும் அந்த அமைப்புகளுக்கு நன்கொடை திரட்டும் ஒவ்வொரு தனி
 
கிவிங் ட்யூஸ்டே ..மைக்ரோசாஃப்டும் ஃபேஸ்புக்கும் இணைந்து 2 மில்லியன் டாலர்கள் நன்கொடை!
வாஷிங்டன் : தேங்க்ஸ் கிவிங்-க்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமை அமெரிக்காவில் கிவிங் ட்யூஸ்டே என அனுசரிக்கப் படுகிறது. நல்ல காரியங்களுக்கு நன்கொடை கொடுக்கும் நாள் என குறிக்கப்பட்டு அன்று தன்னார்வ அமைப்புகளுக்கு நன்கொடை திரட்டப் படுகிறது.
 
இந்த நாளில் ஃபேஸ்புக் மூலம் நன்கொடை திரட்டும் அமெரிக்க தன்னார்வ அமைப்புகளுக்கு 2 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்க உள்ளார்கள். ஒவ்வொரு தன்னார்வ அமைப்புக்கும்  50 ஆயிரம் டாலர்கள் வரையிலும் அந்த அமைப்புகளுக்கு  நன்கொடை திரட்டும் ஒவ்வொரு தனி நபருக்கு ஆயிரம் டாலர்கள் வரையிலும் இணையான தொகையை மைக்ரோசாஃப்ட் – ஃபேஸ்புக் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகிறது.
 
ஃபேஸ்புக் மூலம் கிவிங் ட்யூஸ்டே நன்கொடை திரட்டுவதற்கான கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் இயங்கும்  பல்வேறு தன்னார்வ தமிழ் அமைப்புகளுக்காக, தமிழர்கள் கிவிங் ட்யூஸ்டே நன்கொடை திரட்டி வருகிறார்கள். 
 
அந்த நன்கொடைகளுக்கு நீங்கள் வழங்கும் ஒவ்வொரு டாலருக்கும், ஃபேஸ்புக்-மைக்ரோசாஃப்ட் இன்னொரு டாலர்,  மொதம் இரண்டு டாலராக சம்மந்தப்பட்ட தன்னார்வ அமைப்புக்கு கிடைக்கிறது.
 
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கும் கிவிங் ட்யூஸ்டே நன்கொடை திரட்டி வருகிறார்கள். அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  https://www.facebook.com/donate/1320363611437433/575991012846464/  இணைப்பில் கிவிங் ட்யூஸ்டே நன்கொடை கஜா நிவாரணப் பணிகளுக்கு திரட்டப் படுகிறது.
 
 

From around the web