இன்னொரு பேரழிவிற்கு தயாராக இருங்கள்!பில்கேட்ஸ் எச்சரிக்கை!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரவில்லை. 2021ல் தடுப்பூசி வரலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுவரை உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா தெரபி போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மற்றொரு பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார். கொரோனாவைப் போல காலநிலை மாற்றமும் மிக
 

இன்னொரு பேரழிவிற்கு  தயாராக இருங்கள்!பில்கேட்ஸ் எச்சரிக்கை!சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரவில்லை.

2021ல் தடுப்பூசி வரலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுவரை உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா தெரபி போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மற்றொரு பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார். கொரோனாவைப் போல காலநிலை மாற்றமும் மிக மோசமானது.

இதனால் ஏற்படும் சேதங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கார்பன் டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தாவிட்டால் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடியை மறுபடியும் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இதுவரை உலக அளவில் தோராயமாக 1 லட்சம் மக்களில் 14 பேர் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். அதிகரித்து வரும் வெப்பநிலையால் அடுத்த 40 ஆண்டுகளில், 2060ம் ஆண்டும் இதே போன்ற உயிரிழப்பு விகிதத்தை காண வேண்டி வரலாம்.

தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 லட்சம் பேருக்கு 73 பேர் வரை உயிரிழக்கலாம். கொரோனாவை விட காலநிலை மாற்றத்தால்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத்தை சமாளிக்க அரசுகள் அதிக செலவு செய்ய வேண்டிவரும் என பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web