ஜியோ நிறுவனத்தில் அதிரடியாக கால் பதித்த பேஸ்புக் நிறுவனம்! இனி வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்கள் குவியும்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோலிய பொருட்கள் முதல் தொலைத் தொடர்பு வரை பல தொழில்களில் கால் பதித்து முண்ணனியில் உள்ளது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனப்பங்குகளில் 10 சதவீதத்தை பேஸ்புக் நிறுவனம் ரூ.43574 கோடி விலைக்கு வாங்குகிறது. இதுவரை செய்யப்பட்ட முதலீடுகளில் முகநூலின் மிக அதிக அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடு ஜியோ பங்குகளே என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் பங்குகளை விலை
 

ஜியோ நிறுவனத்தில் அதிரடியாக கால் பதித்த பேஸ்புக் நிறுவனம்! இனி வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்கள் குவியும்!தொலைத் தொடர்பு நிறுவனங்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோலிய பொருட்கள் முதல் தொலைத் தொடர்பு வரை பல தொழில்களில் கால் பதித்து முண்ணனியில் உள்ளது.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனப்பங்குகளில் 10 சதவீதத்தை பேஸ்புக் நிறுவனம் ரூ.43574 கோடி விலைக்கு வாங்குகிறது. இதுவரை செய்யப்பட்ட முதலீடுகளில் முகநூலின் மிக அதிக அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடு ஜியோ பங்குகளே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் பங்குகளை விலை கொடுத்து வாங்கியதன் மூலம் இந்தியாவுக்கு எங்கள் பங்களிப்பை நாங்கள் அளித்துள்ளோம். குறைந்த ஆண்டுகளிலேயே மிக அதிக அளவில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் ஒரு புது சாதனையை உருவாக்க்கும்.

தற்போது அதன் பங்குகளை வாங்கிய நிலையில் நாங்களும் இந்திய மக்களுடன் சாதனையில் இணைகிறோம் என பெருமை பட பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web