அமெரிக்காவில் கொரோனா நிவாரணப் பணியில் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்!

உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அமெரிக்காவில் தான். கொரோனாவினால் அமெரிக்காவில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கும் மேலானோர் பலியாகியுள்ளனர். பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை நோக்கி பொருளாதார நடவடிக்கைகள் திறக்கப்பட்டு வருகிறது. நிரம்பி வழிந்த மருத்துவமனைகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்புப் படையினர், போலீஸ்காரகள் உள்ளிட்ட
 

அமெரிக்காவில் கொரோனா நிவாரணப் பணியில் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்!லகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அமெரிக்காவில் தான். கொரோனாவினால் அமெரிக்காவில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கும் மேலானோர் பலியாகியுள்ளனர். பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை நோக்கி பொருளாதார நடவடிக்கைகள் திறக்கப்பட்டு வருகிறது. நிரம்பி வழிந்த மருத்துவமனைகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்புப் படையினர், போலீஸ்காரகள் உள்ளிட்ட  முதல் களப்பணியாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும்  தன்னார்வ பல்வேறு அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.

அட்லாண்டா மாநகரில் 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பிலும் மருத்துவர்கள், முதல் களப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான கொரோனா உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது.  இதற்காக 4 ஆயிரம் டாலர்களுக்கும் நிதியும் மிகக்குறுகிய காலத்தில் திரட்டப்பட்டுள்ளது.

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா நிவாரணப் பணிகள் வருமாறு:

கிராடி(Grady) மற்றும் எமரி ஜான்ஸ்க்ரீக் (Emory Johnsgreek) மருத்துவமனையில் தன்னலமின்றி, மக்களுக்காகச் சேவை புரிந்து வரும்120 செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பிட்சா துரித உணவு வழங்கப்பட்டது. 

சேவா(SEWA) அமைப்புடன் இணைந்து  தமிழ்ச் சங்கத்தின் தன்னார்வலர்களால் சமைக்கப்பட்ட உணவை  300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். ஃபுட் ஃபார் லைவ்ஸ் (Food for Lives) அமைப்பின் மூலமாக அட்லாண்டாவில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு, ஒரு மாதத்திற்கான தேவையான பதப்படுத்தப்பட்ட  உணவுப் பொருட்களுடன், முகக்கவசம் மற்றும் மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டன.

குவினெட் கவுண்டியில் உள்ள ஹோம் ஃபார் ஹோப்ஸ் (Home of Hopes -Gwinnet County) ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் 25 பேருக்கு  பிட்சா மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

க்ளார்க்ஸன் சமுதாய மையத்தில் (Clarkson Community Center)30 அகதிகளின் குடும்பங்களுக்குத் தேவையான பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கியுள்ளனர். ஜெஸிஸ் ஹவுஸ் (Jesse’s House) ல் உள்ள 7 வயது முதல் 15 வயதிலான பெண் குழந்தைகளுக்குச் சுகாதாரப் பொருட்கள் (Hygiene and Cleaning) கொடுக்கப்பட்டது.

ஹை டவர் பேப்டிஸ்ட் அசோசியேஷன் ஃபுட் அண்ட் க்ளோத்திங் வங்கிக்கு (HighTower Baptist Association Food and Clothing Bank) -க்கு ஒரு மாதத்திற்குத் தேவையான சுகாதார பொருட்கள் (Diapers, Hygiene and Sanitary items) வழங்கப்பட்டது. மேலும், மக்களுக்காக இடைவிடாது பணிபுரியும் தீயணைப்புத் துறையினருக்கு (Fire Fighters) உணவு வழங்கவும் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து வாழ வந்த பூமியில் நடந்துள்ள துக்கத்திலும் சோகத்திலும் பங்கெடுத்து,  அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழர்கள் செய்து வரும் நிவாரணப் பணிகளை அமெரிக்க அமைப்புகளும், அமெரிக்கர்களும் பாராட்டி வருகின்றனர்.

A1TamilNews.com

From around the web