கலிஃபோர்னியாவில் பெட்ரோல் காலன் 4 டாலர்!.. ஏன் இப்படி விலை ஏறுது?

சாக்ரமெண்டோ: கலிஃபோர்னியாவில் பெட்ரோல் விலை காலனுக்கு 4 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் சாலையின் ஒரு புறம் இருக்கும் பெட்ரோல் பங்கில் உள்ள விலையும் எதிர்ப்புற சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்கிலும் ஒரே விலை இருப்பதில்லை. ஒரே சாலையில் எதிர்ப்புறங்கள் வேறு நகரமாக இருக்கலாம், அல்லது வேறு கவுண்டியாக இருக்கலாம், ஏன் ஒரு சில இடங்களில் மாநில எல்லையாகக் கூட இருக்கும். மாநிலம், கவுண்டி, நகரம் என்று மூன்று நிலைகளில் விற்பனை வரி வசூலிக்கப்படுவதால், ஒரே சாலையின்
 

கலிஃபோர்னியாவில் பெட்ரோல் காலன் 4 டாலர்!.. ஏன் இப்படி விலை ஏறுது?சாக்ரமெண்டோ:  கலிஃபோர்னியாவில் பெட்ரோல் விலை காலனுக்கு 4 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் சாலையின் ஒரு புறம் இருக்கும் பெட்ரோல் பங்கில் உள்ள விலையும் எதிர்ப்புற சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்கிலும் ஒரே விலை இருப்பதில்லை. ஒரே சாலையில் எதிர்ப்புறங்கள் வேறு நகரமாக இருக்கலாம், அல்லது வேறு கவுண்டியாக இருக்கலாம், ஏன் ஒரு சில இடங்களில் மாநில எல்லையாகக் கூட இருக்கும்.

மாநிலம், கவுண்டி, நகரம் என்று மூன்று நிலைகளில் விற்பனை வரி வசூலிக்கப்படுவதால், ஒரே சாலையின் எதிர்ப்புறத்தில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனாலும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை.

அதே வேளையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மட்டும் எப்போதுமே மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் விலை கூடுதலாகவே இருக்கும். குறைந்தது ஒரு டாலர் அளவிற்காவது கூடுதல் விலை இருக்கும்.

தற்போது அந்த வித்தியாசம் மேலும் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. ஒரு காலன் பெட்ரோல் கலிஃபோர்னியாவில் 4 டாலர்களை கடந்த நிலையில், டெக்சாஸில் சராசரியாக ஒரு காலன் பெட்ரோல் 2 டாலர் 25 சென்ட்களாக இருக்கிறது.

கலிஃபோர்னியாவில் பெட்ரோல் காலன் 4 டாலர்!.. ஏன் இப்படி விலை ஏறுது?

இரு மாநிலங்களிலும் பெட்ரோல் சுத்தகரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. டெக்சாஸுக்கு அருகிலேயே கச்சா எண்ணெய் கிடைப்பதால் போக்குவரத்து செலவு கொஞ்சம் குறைவாக இருக்கலாம்.  

கலிஃபோர்னியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பாதி அளவுக்கு மாநிலத்திலேயே கிடைத்து வந்தது. மேலும் அலாஸ்காவிலிருந்தும் வந்தது. தற்போது கலிஃபோர்னியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து, அலாஸ்காவிலிருந்தும் வரத்து குறைந்துள்ளதால், சவுதி அரேபியா, ஈக்குவடார், கொலம்பியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வர வேண்டியுள்ளது. 

இந்நிலையில் கலிஃபோர்னியாவுக்கு கச்சா எண்ணெய் அளிக்கும் 25 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் எதிர்பாராத பிரச்சனைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  உற்பத்தி குறைவு, தேவை அதிகம் என்பதால் விலையேற்றம் தவிர்க்க முடியாதது ஆகிறது.

கலிஃபோர்னியாவில் பெட்ரோல் காலன் 4 டாலர்!.. ஏன் இப்படி விலை ஏறுது?

மேலும், கலிஃபோர்னியாவில் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகளில் சிறப்பு ஆக்ஸிஜினேட்டட் கலவை என்றழைக்கப்படும், மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப் படவேண்டியது உள்ளது.  சுத்தகரிப்பு ஆலைகள் இதற்காக பிரத்தியேக முறைகளை கையாள வேண்டும். அதனால் இறக்குமதிக்கான வாய்ப்புகளும் குறைகின்றன.

இந்த காரணங்களால் அமெரிக்க அளவில் பெட்ரோல் விலை சராசரியாக 2 டாலர்கள் 65 சென்ட்களாக இருக்கும் போது, கலிஃபோர்னியாவில் 4 டாலர்களாக உயர்ந்துள்ளது. கடுமையான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளுக்காக கலிஃபோர்னியாவில் வசிப்பவர்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டியதுள்ளது. அதனாலேயே அங்கு மின்சார வாகனங்களுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

From around the web