சளி, இருமல், தொண்டை கரகரப்பை விரட்டியடிக்கும் பூண்டு மிளகு சாதம்!!

கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தவர்கள் பல்வேறு பணிகளின் காரணமாக மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கிறோம். வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் லேசாக தொண்டை கரகரப்பு இருந்தாலே பயத்தில் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்து விடும். இதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு நாட்கள் பூண்டு,மிளகுக் குழம்பு வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் லேசாக இருக்கும் சளி, தொண்டைக் கரகரப்பு, இருமல் இவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
 

சளி, இருமல், தொண்டை கரகரப்பை விரட்டியடிக்கும் பூண்டு மிளகு சாதம்!!கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தவர்கள் பல்வேறு பணிகளின் காரணமாக மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கிறோம். வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் லேசாக தொண்டை கரகரப்பு இருந்தாலே பயத்தில் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்து விடும்.

இதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு நாட்கள் பூண்டு,மிளகுக் குழம்பு வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் லேசாக இருக்கும் சளி, தொண்டைக் கரகரப்பு, இருமல் இவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது இந்த பூண்டு மிளகுக் குழம்பு.

தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – ஒரு கப்
கடுகு – 1/2டீஸ்பூன்
உளுந்து – 1/2டீஸ்பூன்
கடலை பருப்பு – 1/2டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
சின்ன வெங்காயம் –10
பூண்டு – 10 பல்
மிளகுத்தூள் –   1டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து  கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு தாளிக்க வேண்டும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

இடித்து வைத்த வெங்காயம், பூண்டு, உப்பு போட்டு வதக்கிவிட வேண்டும். சேர்ந்து வந்த உடன்  சாதம் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கடைசியில்  மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி சுடச்சுட சாப்பிட தொண்டை கரகரப்பு ஓடியே போய் விடும்.

A1TamilNews.com

From around the web