வடமாநிலங்களில் களைகட்டிய தசரா! நாப்கின்களுடன் நடனமாடிய பெண்கள்!!

அகமதாபாத்: வடமாநிலங்களில் தசரா பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாண்டியா நடனமாடியும், சிறப்பு வழிபாடு நடத்தியும் பக்தர்கள் தசராவை கொண்டாடி வருகின்றனர். வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா விழா முடிவும் தருவாயிலை நெருங்கி உள்ளது. இதனையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குஜராத்தில் சானிட்டரி நாப்கின்களை கையில் வைத்துக்கொண்டு ஏராளமான பெண்கள் கர்பா நடனமாடினர். சூரத் நகரில் நடைபெற்ற துர்கா பூஜைக்கு பிறகு, இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் மற்றும்
 

வடமாநிலங்களில் களைகட்டிய தசரா! நாப்கின்களுடன் நடனமாடிய பெண்கள்!!அகமதாபாத்: வடமாநிலங்களில் தசரா பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாண்டியா நடனமாடியும், சிறப்பு வழிபாடு நடத்தியும் பக்தர்கள் தசராவை கொண்டாடி வருகின்றனர்.

வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா விழா முடிவும் தருவாயிலை நெருங்கி உள்ளது. இதனையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குஜராத்தில் சானிட்டரி நாப்கின்களை கையில் வைத்துக்கொண்டு ஏராளமான பெண்கள் கர்பா நடனமாடினர்.

சூரத் நகரில் நடைபெற்ற துர்கா பூஜைக்கு ‌‌பிறகு, இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் மற்றும் டெக்னாலஜி கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கையில் நாப்கின்களை வைத்துக்கொண்டு நடனமாடினர்.

இதேபோல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கர்நாடகா எம்.எ‌ல்.ஏ மகேஷ் உற்சாகமாக நடனமாடி தசராவை கொண்டாடி மகிழ்ந்தார். நவராத்திரி விழாவின் கடைசி‌ நா‌ளில் கொண்டாடப்படும் மகாநவமி பூஜையில் கலந்துகொண்ட மகேஷ், பொதுமக்களுடன் இணைந்து நடனமாடினார்.

மேலும் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் களைகட்டிவரும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் நடைபெற்ற மகாநவமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கையில் பானையை வைத்துக்கொண்டு நடனம் ஆடினர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் ஏராளமான கர்பா நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வண்ணமயமான ஆடை அணிந்த விமானிகள் மற்றும் பயணிகள் இசைக்கேற்ப நடனமாடி பார்வையாளர்கள் மனதைக் கொள்ளை கொண்டனர்.

– வணக்கம் இந்தியா

From around the web