71வது நினைவு நாளில் மகாத்மா காந்தியை மீண்டும் சுட்ட இந்து மகா சபா தேசியச் செயலாளர்!

அலிகார்: நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71 நினைவுநாள் நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டு வந்த வேளையில், நாட்டின் சுதந்திரத்திற்காக அவருடைய பங்களிப்பு நினைவுகூறப்பட்டது. ஆனால், அதே நாளில் உத்தரப்பிரதேசம் அலிகார் நகரில் இந்து மகா சபையைச் சார்ந்த பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டே தலைமையில், மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு ரத்தம் சிந்துவது போல் காட்டி, தீயிட்டு கொளுத்தியுள்ளனர். மேலும் நாதுராம் கோட்சேவின் சிலைக்கு மாலை போட்டு மகாத்மா
 

71வது நினைவு நாளில் மகாத்மா காந்தியை மீண்டும் சுட்ட இந்து மகா சபா தேசியச் செயலாளர்!

அலிகார்:  நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71 நினைவுநாள் நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டு வந்த வேளையில், நாட்டின் சுதந்திரத்திற்காக அவருடைய பங்களிப்பு நினைவுகூறப்பட்டது.
 
ஆனால், அதே நாளில் உத்தரப்பிரதேசம் அலிகார் நகரில் இந்து மகா சபையைச் சார்ந்த பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டே தலைமையில், மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு ரத்தம் சிந்துவது போல் காட்டி, தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
 
மேலும் நாதுராம் கோட்சேவின் சிலைக்கு மாலை போட்டு மகாத்மா கோட்சே என்று கோஷமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகத்தளங்கள் மூலம் பரப்பியும் விட்டுள்ளனர்.
 
பூஜா சகுன் பாண்டே, அவருடைய கணவர் மற்றும் 12 பேர் மீது குற்றவியல் பிரிவு 147, 148, 149, 295(a) மற்றும் 153 (a) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அலிகார் போலீஸ் சீனியர் சூப்பிரண்டு ஆகாஷ் குல்ஹாரி தெரிவித்துள்ளார்.
 
“பூஜா சகுன் பாண்டே, அவருடைய கணவர் அசோக் பாண்டே மற்றும் 10 -12 பேர் ஒரு வீடியோவில் காந்தியின் உருவ பொம்மையை ஏர் துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு கொளுத்தியுள்ளார்கள்,” என்றும் ஆகாஸ் குல்ஹாரி கூறியுள்ளார். 
 
ஆனாலும் யாரும் இன்னும் கைது செய்யப்பட வில்லை. பூஜா சகுன் பாண்டே இந்து மகா சபாவின் தேசியச் செயலாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
– வணக்கம் இந்தியா
 

From around the web