கால்சியம் சத்துக்களைத் தரும் கம்பு புட்டு

தேவையானவை கம்பு மாவு -2கப் வெல்லம் -ஒன்றரை கப் தேங்காய்துருவல் -1கப் முந்திரிப் பருப்பு -5 நெய் -3டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் -1டீஸ்பூன் செய்முறை கம்பை நன்கு கழுவி, 4 அல்லது 5 முறைகளாக அலசி, கல் எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவில் கல், மண் தட்டுப்படும். பிறகு, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு, நல்ல வெயிலில் மொறுமொறுவென காய வைக்கவும். நன்கு காய்ந்ததும், சூடான வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, படபடவெனப் பொரியும் வரை வறுத்து, அள்ளவும். வறுத்த
 
கால்சியம் சத்துக்களைத் தரும் கம்பு புட்டுதேவையானவை
கம்பு மாவு -2கப்
வெல்லம் -ஒன்றரை கப்
தேங்காய்துருவல் -1கப்
முந்திரிப் பருப்பு -5
நெய் -3டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1டீஸ்பூன்
செய்முறை
கம்பை நன்கு கழுவி, 4 அல்லது 5 முறைகளாக அலசி, கல் எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவில் கல், மண் தட்டுப்படும். பிறகு, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு, நல்ல வெயிலில் மொறுமொறுவென காய வைக்கவும். நன்கு காய்ந்ததும், சூடான வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, படபடவெனப் பொரியும் வரை வறுத்து, அள்ளவும். வறுத்த கம்பை மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்.
இந்த மாவில் 2 கப் எடுத்து,சிட்டிகை உப்பு போட்டு தண்ணீர் தெளித்து, பிசிறி, ஆவியில் வேகவைக்கவும். கம்பு வேகுவதற்கு நிறைய நேரம் எடுக்கும். அது வேகும் நேரத்தில் வெல்லத்தைத் தட்டி, அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும், இறக்கி அதில் ஏலக்காய் தூள், முந்திரி, தேங்காய் துருவல், நெய் சேர்க்கவும்.
வெந்த புட்டை மணல் மாதிரி உதிர்த்து, அதே சூட்டோடு பாகில் கொட்டி நான்றாக கிளறவும். உதிரி உதிராக வந்ததும் பரிமாறவும். ரொம்ப ருசியாக இருக்கும்.
சிறு தானியங்களை அப்படியே கொடுத்தால், குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். சத்தான சிறு தானியங்களின் இந்த மாதிரி அவர்களுக்கு பிடித்த உணவு வெரைட்டியாக செய்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இப்படித் தான் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாற்ற வேண்டும்.

From around the web