போன் பே, பே ஏடிஎமால் கிடைத்த நல்ல விஷயம்! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

NEFT எனப்படும் தேசிய இணையவழி பணப் பரிவர்த்தனை முறை மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலங்களில் NEFT முறையில் 252 கோடி பரிவர்த்தனைகளும், UPI முறையில் 874 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன. மின்னணு பணப்பரிவர்த்தனையை அதிகப்படுத்தும் நோக்கில், வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் NEFT பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்ககூடாது
 

போன் பே, பே ஏடிஎமால் கிடைத்த நல்ல விஷயம்! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிNEFT எனப்படும் தேசிய இணையவழி பணப் பரிவர்த்தனை முறை மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலங்களில் NEFT முறையில் 252 கோடி பரிவர்த்தனைகளும், UPI முறையில் 874 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன.

மின்னணு பணப்பரிவர்த்தனையை அதிகப்படுத்தும் நோக்கில், வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் NEFT பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்ககூடாது என ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு‌ உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்க்குகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் ஃபாஸ்ட்டேக் (FASTags) முறையில் மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

 

 

From around the web