அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த முயற்சி… இலவச டெக்னாலஜி பயிற்சி!

அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ப் பள்ளிகள் , தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தளங்களில் தமிழர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் வசிப்பவர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் தன்னார்வப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பெருவாரியான தமிழர்கள் ஐடி துறையில் பணிபுரிபவர்கள். ஐடி துறையில் நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகி வருகிறது. அதில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தவர்கள், மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளார்கள். சான் ஃப்ரான்சிஸ்கோ
 

அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த முயற்சி… இலவச டெக்னாலஜி பயிற்சி!மெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ப் பள்ளிகள் , தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தளங்களில் தமிழர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் வசிப்பவர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் தன்னார்வப் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும்  பெருவாரியான தமிழர்கள் ஐடி துறையில் பணிபுரிபவர்கள். ஐடி துறையில் நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகி வருகிறது. அதில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தவர்கள், மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளார்கள்.

சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ அமைப்பு, மாதம்தோறும் டெக்னாலஜி மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கான இலவச பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் வளைகுடாப் பகுதியின் ஃப்ரீமாண்ட், ப்ளெசென்டன் உள்ளிட்ட வெவ்வேறு நகரங்களில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

தற்போது க்ளவுட் டெக்னாலஜி பிரபலமடைந்து வருவதால், தமிழர்கள் இந்த தொழில்நுட்பத்தால் கிடைக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் க்ளவுட் டெக்னாலஜியில் பயிற்சி அளிக்கிறார்கள்.

பல்வேறு டெக்னாலஜி சார்ந்த அறிமுக வகுப்புகள், பயிற்சி வகுப்புகள் நடந்துள்ள நிலையில்,  கூகுள் க்ளவுட் (Google Cloud) டெக்னாலஜிக்கான சான்றிதழ் பெறுவதற்கான பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஃப்ரீமாண்டில் வாரம் தோறும் சனிக்கிழமை 5 மணி நேரம் வீதம் எட்டு வாரங்களுக்கு இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தன்னார்வலர் கணபதி சந்திரசேகரன் நடத்தும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்கள் கூகுள் க்ளவுட்(Google Cloud) சான்றிதழுக்கான தேர்வு எழுத முடியும். தேர்வில் வெற்றி பெற்ற கூகுள் க்ளவுட் சான்றிதழ் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வழி வகுக்கும்.

அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த முயற்சி… இலவச டெக்னாலஜி பயிற்சி!

இந்த இலவச பயிற்சிகள் குறித்து உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிறுவனர் கோவிந்த் கூறியதாவது, “ அமெரிக்காவில், குறிப்பாக வளைகுடாப் பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு டெக்னாலஜி துறையின் புதிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அமைப்பை ஏற்படுத்தினோம். வெவ்வெறு துறைகளைச் சார்ந்த தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பயிற்சி அளிக்க முன் வருகிறார்கள்.

பெண்கள் உள்பட வளைகுடாப் பகுதியில் வசிக்கும்  தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பலன் அடைந்து வருகிறார்கள். ஏராளமான பெண்கள் இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் தன்னம்பிக்கையுடன் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பணியாற்றி வருகிறார்கள். தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் மனநிறைவுடன் தன்னார்வத் தொண்டர்கள் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்,” என்று கூறினார்.

மேலும் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதற்காக வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சுமார் 700 பேருக்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளார்கள். வேலை தேடுபவர்களுக்கு, வளைகுடாப் பகுதியில் உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்து கொள்ள உதவியாக இந்த குழுக்கள் அமைந்துள்ளது.

கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் “உதவும் உள்ளங்கள்”  அமைப்பு நடத்தி வரும் பயிற்சி வகுப்புகள் மற்றும் வேலை வாய்ப்புக்கான வாட்ஸ் அப் குழுக்கள் பற்றிய விவரங்களுக்கு ggrajan@gmail.com என்ற இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

https://www.A1TamilNews.com

From around the web