பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்கள்! சென்னை மாநகராட்சி அதிரடி !

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்,மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருவதாலும், மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்கள் வீடுகளில் இருந்து பொழுதை பயனுள்ள வகையில் கழிப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 6000 இலவச ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை வழங்கியுள்ளது.
 

பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்கள்! சென்னை மாநகராட்சி அதிரடி !கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்,மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருவதாலும், மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்கள் வீடுகளில் இருந்து பொழுதை பயனுள்ள வகையில் கழிப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 6000 இலவச ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை வழங்கியுள்ளது.

ஆன்லைன்கள் மூலம் வகுப்புக்கள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மொபைல் போன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

A1TamilNews.com

From around the web