பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13ஆவது இடம்!

ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13ஆவது இடத்தை பெற்றுள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஃபோர்பஸ் இதழ், ஆண்டுதோறும் இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிடுகிறது. அப்பட்டியலானது, பிரபலங்களின் புகழ், வருமானம் உள்ளிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நடப்பண்டுக்கான பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அவர், கடந்த ஆண்டு 14 ஆவது இடம் பிடித்த நிலையில், இம்முறை ஒரு இடம் முன்னேறியுள்ளார். டெஸ்ட் தரநிலையில்
 

பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13ஆவது இடம்!போர்பஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13ஆவது இடத்தை பெற்றுள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபோர்பஸ் இதழ், ஆண்டுதோறும் இந்தியாவின் 100 பிரபலங்களின்‌ பட்டியலை வெளியிடுகிறது. அப்பட்டியலானது, பிரபலங்களின் புகழ், வருமானம் உள்ளிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

நடப்பண்டுக்கான பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அவர், கடந்த ஆண்டு 14 ஆவது இடம் பிடித்த நிலையில், இம்முறை ஒரு இடம் முன்னேறியுள்ளார். டெஸ்ட் தரநிலையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி‌ இந்தாண்டுக்கான பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

கடந்தாண்டு இரண்டாம் இடம் பெற்ற இவர், இந்தாண்டில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார் இரண்டாம் இடத்திலும், சல்மான் கான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்‌ , கிரிக்கெட் வீரர் தோனி, இந்தி நடிகர் ஷாருக்கான் ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 6ஆவது இடங்களைப் பெற்றுள்ளனர்‌.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஏழாவது இடத்தில் உள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பட் 8 ஆவது இடத்தையும், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 9ஆவது இடத்தையும், நடிகை தீபிகா படுகோன் 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா 11ஆவது இடத்தையும், ரிஷப் பந்த் 30ஆவது இடத்தையும், ஹர்திக் பாண்டியா 31ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். தமிழ் சினிமா நடிகர்கள் ரஜினிகாந்த் 13ஆவது இடத்தையும், விஜய் 47ஆவது இடத்தையும், அஜித்குமார் 52ஆவது இடத்தையும், தனுஷ் 64ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு பட்டியலில் இடம்பெறாத இயக்குநர் ஷங்கர், இந்தாண்டு 55ஆவது இடத்தையும், விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா 80ஆவது இடத்தையும், பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 84ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

https://www.A1TamilNews.com

 

From around the web