பித்த வெடிப்பை வீட்டிலிருந்த படியே எளிய முறையில் சரி செய்ய இதைப் ஃபாலோ பண்ணுங்க!

முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள மணிக்கணக்கில் கத்தையாக செலவழிக்கும் நாம் பெரும்பாலும் பாதங்களை கண்டு கொள்வதே இல்லை. உடலின் அனைத்து நரம்புகளின் மர்மப்புள்ளிகளும் பாதத்தில் இணைவதோடு நம் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களைப் பராமரிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். பொதுவாக பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் உலர்ந்த வானிலை நிலவும் இடங்களில் வசிப்பவர்களுக்கு அதிகம் காணப்படும். அடிப்படையான காரணம் இதுவாக இருப்பினும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள், சரியான அளவுகளில் காலணிகள் அணியாமலிருப்பவர்கள் , நின்று கொண்டே வேலை
 

பித்த வெடிப்பை வீட்டிலிருந்த படியே எளிய முறையில் சரி செய்ய இதைப் ஃபாலோ பண்ணுங்க!முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள மணிக்கணக்கில் கத்தையாக செலவழிக்கும் நாம் பெரும்பாலும் பாதங்களை கண்டு கொள்வதே இல்லை. உடலின் அனைத்து நரம்புகளின் மர்மப்புள்ளிகளும் பாதத்தில் இணைவதோடு நம் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களைப் பராமரிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

பொதுவாக பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் உலர்ந்த வானிலை நிலவும் இடங்களில் வசிப்பவர்களுக்கு அதிகம் காணப்படும். அடிப்படையான காரணம் இதுவாக இருப்பினும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள், சரியான அளவுகளில் காலணிகள் அணியாமலிருப்பவர்கள் , நின்று கொண்டே வேலை செய்பவர்கள் , அதிக மன அழுத்ததுடன் இருப்பவர்கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

பித்தவெடிப்பை அலட்சியம் செய்தால் கால்களில் ஆழமாக இறங்கி நிற்பதற்கும்,நடப்பதற்குமே மிகுந்த சிரமத்தை உருவாக்கி விடும். மேலும் பாத வெடிப்புக்கள் கால் ஆணிகள், சர்க்கரை உருவாகவும் காரணமாகின்றன.

காரணங்கள் எதுவாக இருப்பினும் இதற்காக அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. மிக எளிதான முறையில் வீட்டிலிருந்த படியே சரி செய்து கொள்ள முடியும்.

மிகவும் ஆரம்ப நிலையில் லேசாக பித்த வெடிப்பு உள்ளவர்கள் தினமும் வெது வெதுப்பான தண்ணீரில் பாதத்தை கழுவி வந்தாலே நாளடைவில் சரியாகிவிடும்.

நடக்கும் போது காலில் லேசான வலியுடன் இருப்பவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பைப் போட்டு தினமும் 15 நிமிடங்கள் பாதத்தை ஊறவைத்து கழுவி விட வேண்டும்.

உலர்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பாதத்தை சுத்தம் செய்த பிறகு லேசாக தேங்காய் எண்ணெயைத் தடவி வரலாம் . பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய், கற்றாழை கிரீம் இவற்றைவும் பயன்படுத்தலாம்.

பாத வெடிப்புக்கள் காலை கீழே வைத்தாலே கடுமையான வலியுடன் இருக்கும் பட்சத்தில் அதிலும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரிடமும் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அதே நேரத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேப்பிலை, மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தினமும் பூசி வர விரைவில் குணம் காணலாம். சோற்றுக்கற்றாழை, தேங்காய் எண்ணெய், மஞ்சள் பொடி கலந்தும் பயன்படுத்தினாலும் விரைவில் சரியாகும்.

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து, பாதங்களை 10 நிமிடங்கள் அதில் சுத்தம் செய்திட பாதங்கள் சுத்தமாகவும், மிருதுவாகவும், பளிச்சென காணப்படும்.

தேனையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து பித்தவெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி வர பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

A1TamilNews.com

From around the web