#Breaking:ஆன்லைனில் விவசாய பொருட்கள் விற்க நடவடிக்கை! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

கொரோனா பரவலால் 52வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விவசாயத்தின் மூலம் பெறப்படும் விளைப்பொருட்களை ஆன்லைன் மூலம் அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்யும் எனவும், ஆன்லைன் மூலமாகவே பொதுமக்களிடையே விற்பனை செய்யப்படும் எனவும் அதற்கான கட்டமைப்புகள் விரைவில் உருவாக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
 

#Breaking:ஆன்லைனில் விவசாய பொருட்கள் விற்க நடவடிக்கை! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!கொரோனா பரவலால் 52வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விவசாயத்தின் மூலம் பெறப்படும் விளைப்பொருட்களை ஆன்லைன் மூலம் அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்யும் எனவும், ஆன்லைன் மூலமாகவே பொதுமக்களிடையே  விற்பனை செய்யப்படும் எனவும் அதற்கான  கட்டமைப்புகள் விரைவில் உருவாக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். .

மேலும் மாநிலங்களுக்கிடையே விவசாய விளைபொருட்கள் தங்குதடையின்றி கொண்டு செல்லவும் சட்டம் இயற்றப்படும்.

பயிரிடப் படும் போதே விளைபொருட்களின் விலைகள்  தோராயமாக நிர்ணயம் செய்யப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் சந்தைப்படுத்தப்படவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web