ஏறி இறங்கும் இந்திய ரூபாயின் மதிப்பு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை காலையில் 69 ரூபாய் 79 பைசாவாக குறைந்துள்ளது. செவ்வாய்கிழமை 34 பைசா உயர்ந்து 69 ரூபாய் 43 பைசாவாக இருந்தது. அமெரிக்காவில் அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருப்பதாலும், அதிபர் ட்ரம்புக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் தடைபட்டு இருப்பதாலும், டாலர் மதிப்பு குறைந்தது. புத்தாண்டுக்குப் பிறகு அமெரிக்க அவை உறுப்பினர்களும் செனட்டர்களும் தலைநகருக்கு வருகிறார்கள். அதிபருடன் பேச்சுவார்த்தை தொடரும் என கூறப்படுகிறது. மெக்சிகோவுக்கு இடையே
 
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை காலையில் 69 ரூபாய் 79 பைசாவாக குறைந்துள்ளது. செவ்வாய்கிழமை 34 பைசா உயர்ந்து 69 ரூபாய் 43 பைசாவாக இருந்தது.
 
அமெரிக்காவில் அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருப்பதாலும், அதிபர் ட்ரம்புக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் தடைபட்டு இருப்பதாலும், டாலர் மதிப்பு குறைந்தது.
 
புத்தாண்டுக்குப் பிறகு அமெரிக்க அவை உறுப்பினர்களும் செனட்டர்களும் தலைநகருக்கு வருகிறார்கள். அதிபருடன் பேச்சுவார்த்தை தொடரும் என கூறப்படுகிறது. மெக்சிகோவுக்கு இடையே சுவர் கட்ட பணம் ஒதுக்கினால், குடியுரிமைச் சட்ட சீர்திருத்தத்திற்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொள்ளக் கூடும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் டாலர் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம் இந்திய ரூபாய் மதிப்பில் எதிரொலித்துள்ளது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையிலிருந்து 48.19 கோடி ரூபாய் அளவில் பணத்தை  திருப்பி எடுத்ததும் காரணமாகக் கூறப்படுகிறது. 
 
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், ரூபாயின் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அமெரிக்காவில் நாடெங்கிலும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது.
 
– வணக்கம் இந்தியா

From around the web