கர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்!

சென்னை: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் ஈரோட்டை வந்தடைந்தது. நேற்று மாலை முதல் ஈரோடு காவிரி ஆற்றில் நீரின் அளவு 8 அடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். கரையோரத்தில் இருந்த கோவில் மூழ்கியுள்ளதாகவும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹேமாவதி அணை
 

 

சென்னை: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் ஈரோட்டை வந்தடைந்தது.

நேற்று மாலை முதல் ஈரோடு காவிரி ஆற்றில் நீரின் அளவு 8 அடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். கரையோரத்தில் இருந்த கோவில் மூழ்கியுள்ளதாகவும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹேமாவதி அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. கபிணி அணை ஏற்கெனவே நிரம்பிவிட்டது. அதிலிருந்து 45 ஆயிரம் அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இப்போது 80 அடியைத் தாண்டியுள்ளது நீர்மட்டம்.

– வணக்கம் இந்தியா

From around the web