சென்னை விமானங்களுக்கு தடை விதித்த இந்திய விமான நிலையம்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 64,689பேர். ஜூலை5ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட உள்ளன. அந்த வரிசையில் உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் சென்னையில் இருந்து வருகிற 6ந்தேதி முதல் 19ந்தேதி வரை விமானங்கள் வருவதற்கு தடை
 

சென்னை விமானங்களுக்கு தடை விதித்த இந்திய விமான நிலையம்!தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாதிப்பு  எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 64,689பேர்.

ஜூலை5ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட உள்ளன. அந்த வரிசையில் உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் சென்னையில் இருந்து வருகிற 6ந்தேதி முதல் 19ந்தேதி வரை விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து, 6ந்தேதி முதல் 19ந்தேதி வரை உள்நாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

A1TamilNews.com

From around the web