ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயம்! தவிப்பில் குடும்பத்தினர்!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 15 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற 90 மீனவர்களில், 60 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 15 நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் துறை பகுதியில் இருந்து 2 விசை படகுகளிலும் வல்லவிளை பகுதியில் இருந்து 5 படகுகளிலும், இரவிபுத்தன்துறையில் இருந்து ஒரு படகு என மொத்தம் 8 படகுகளில் 90 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்
 

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 15 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற 90 மீனவர்களில், 60 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 15 நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் துறை பகுதியில் இருந்து 2 விசை படகுகளிலும் வல்லவிளை பகுதியில் இருந்து 5 படகுகளிலும், இரவிபுத்தன்துறையில் இருந்து ஒரு படகு என மொத்தம் 8 படகுகளில் 90 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் உறவினர்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில், 3 படகுகள், கேரள மாநிலம் கொச்சி மற்றும் கோவாவின் ஹார்வா துறைமுகங்களில் கரை ஒதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து 30 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில், வல்லவிளை பகுதியில் இருந்து 5 படகுகளில் சென்ற 60 மீனவர்களின் நிலை குறித்த தகவல் தெரியவரவில்லை இந்நிலையில், கடலில் உள்ள மீனவர்களை தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

-வணக்கம் இந்தியா

From around the web