முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாஸன்.. லாபம் வருமா?!

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷனும், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம். இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும்
 

முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாஸன்.. லாபம் வருமா?!ரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம்.

இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.

அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதிக்கு அவர் ஜோடியாவது இதுதான் முதல் முறை. இவர்களோடு ஜெகபதிபாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அறமும் அரசியலும் பேசிய படங்களைத் தந்த. தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் லாபம் படத்தை இயக்குகிறார். ராஜபாளையத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

படத்துக்கு ஒளிப்பதிவு ராம்ஜி, இசை டி இமான்.

– வணக்கம் இந்தியா

From around the web